Published : 09 Jan 2015 12:30 PM
Last Updated : 09 Jan 2015 12:30 PM
திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக 11-வது முறையாக கருணாநிதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். க.அன்பழகன் 10-வது முறையாக பொதுச்செயலாளர் ஆனார். திமுக பொருளாளராக ஸ்டாலினும், மகளிரணிச் செயலாளராக கனி மொழியும் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுகவின் 14-வது உட்கட்சி தேர்தல் நிறைவு பெற்றதைய டுத்து, திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத் தில் நேற்று கூடியது. காலை 7 மணி முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்தனர். திமுக நிர்வாகிகளில் பொருளாளர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு வந்தார்.
இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியும், பொதுச்செயலா ளர் அன்பழகனும் வந்தனர். தமிழ கம் முழுவதும் இருந்து 2500-க்கும் அதிகமான பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். பொதுக்குழு கூட்டம் சரியாக காலை 9.15 மணிக்கு கூடியது. முதல் நிகழ்வாக, திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக் கப்பட்டது.
இதற்கான தேர்தல் ஆணை யராக திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியனை சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியன் முன்மொழிந்தார். அதனை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி வழிமொழிந்தார். இதையடுத்து பேசிய சற்குண பாண்டியன், திமுக தலைவர் பதவிக்கு கருணாநிதி மட்டுமே போட்டியிடுவதாகவும் அவரை 603 பேர் முன் மொழிந்தும் வழி மொழிந்தும் உள்ளதால், 11-வது முறையாக திமுக தலைவராக கருணாநிதி அறிவிக்கப்படுகிறார் என்றார்.
இதேபோல், பொதுச்செயலாளர் பதவிக்கு அன்பழகன் மட்டுமே போட்டியிடுகிறார், பொருளாளர் பதவிக்கு ஸ்டாலின் மட்டுமே போட்டியிடுகிறார். இவர்கள் இருவரையும் 603 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ளனர். எனவே, திமுக பொதுச் செயலாளராக அன்பழகன் 10-வது முறையாக பொறுப்பேற்கிறார். ஸ்டாலின் 2-வது முறையாக பொருளாளர் ஆகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த துரைமுருகன் முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். துரைமுருகனுக்கு பதிலாக ஐ.பெரியசாமி துணைப் பொதுச் செயலாளர் ஆனார். மேலும் சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி ஆகியோர் மீண்டும் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர். சுப்பு லட்சுமி ஜெகதீசனும் புதிதாக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் திமுக துணைப் பொதுச் செயலா ளர்களின் எண்ணிக்கை 4 ஆனது.
கனிமொழிக்கு மகளிரணிச் செயலாளர் பதவியும், கொள்கை பரப்புச் செயலாளர் பதவிக்கு திருச்சி சிவாவும், ஆ.ராசாவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மாணவரணி செயலாளராக கடலூர் இள.புகழேந்தியும், தொழிலா ளர் அணிச் செயலாளராக சிங்கார ரத்தினசபாபதியும் அறிவிக்கப் பட்டனர்.
இந்தப் பொதுக்குழுவில் 11-வது முறையாக திமுக தலைவ ராகியுள்ள கருணாநிதியை வாழ்த்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
இதையடுத்து பாஜகவை சேர்ந்த எம்.பி.க்கள் மத ரீதியாக கூறி வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசு மதவாத ரீதியாக செயல்படுவதாகவும் அதை கண்டிப்பதாகவும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர அதிமுக ஆட்சியில் ஆவின் ஊழல், கிரானைட் முறைகேடு, முட்டை வாங்கியதில் ஊழல், தாது மணல் கொள்ளை போன்ற ஊழல்கள் குறித்த பட்டியலுடன் பேரணி நடத்தி, அந்தப் பட்டியல் தமிழக ஆளுநரி டம் அளிக்கப்படும் என்ற தீர்மான மும், தைமாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பதை வலியு றுத்தி 3-வது தீர்மானமும் நிறைவேற் றப்பட்டது. இந்த தீர்மானங்களை பொருளாளர் ஸ்டாலின் வாசித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT