Last Updated : 28 Jan, 2015 08:59 AM

 

Published : 28 Jan 2015 08:59 AM
Last Updated : 28 Jan 2015 08:59 AM

காங்கிரஸ்தான் எங்கள் கட்சி: தனிக்கட்சி தொடங்குவதாக வதந்தி கிளப்புகின்றனர் - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

‘காங்கிரஸ்தான் எங்கள் கட்சி. எனது தந்தை தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக சிலர் வதந்தி கிளப்பி வருகிறார்கள் ’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரசை விட்டு ஜி.கே.வாசன் வெளியேறி தனிக் கட்சி தொடங்கியதும் காங்கிரசில் சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதனால் ப.சிதம்பரம் அதிருப்தியில் உள்ளார் என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவராக்கு வதற்கு முன்பே, கட்சி மேலிடம் தனக்கு உரிய முக்கியத்துவத்தை தருவதில்லை என்று சிதம்பரம் அதிருப்தியில் இருந்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தலைவரானதால் அவரது அதிருப்தி அதிகமானது. கட்சியில் கார்த்தி சிதம்பரம் உட்பட மாவட்ட அளவி லும் சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியையாவது பெறலாம் என்று எதிர்பார்த்த கார்த்தி சிதம்பரத்துக்கு அந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.

இது சிதம்பரம் ஆதரவாளர் களை மேலும் விரக்தியடையச் செய்தது. இதன் வெளிப்பாடா கத்தான் சிதம்பரம் ஆதரவாள ராக இருந்து வந்த செல்வப் பெருந்தகை இப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் நெருக்கமாகியுள்ளார்.

மேலும் கார்த்தி சிதம்பரம் கடந்த 22-ம் தேதி தனது ஆதரவாளர் களுடன் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கு நோட்டீஸ் அளித்ததோடு மட்டுமில்லாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளிப்படையாக விமர்சித்தது சிதம்பரத்தை அதிருப்தியின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இந்தப் பின்னணியில்தான் வாசனை சிதம்பரம் சந்தித்தார் என்றும், தனிக்கட்சி தொடங்கு கிறார் என்றும் உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தனிக்கட்சி தொடங்குகிறோம் என்று வேண்டுமென்றே சிலர் வதந்தி கிளப்பி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல். இதனை மறுப்பதோடு வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் கட்சி காங்கிரஸ்தான். அதைவிட்டு விலக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x