Published : 05 Jan 2015 09:11 AM
Last Updated : 05 Jan 2015 09:11 AM

திருச்சி சிறுதானிய உணவுத் திருவிழாவில் 8,000 பேருக்கு இயற்கை உணவு வழங்கல்

திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 9-ம் ஆண்டு விழாவையொட்டி, நஞ் சற்ற சிறுதானிய இயற்கை உணவுத் திருவிழா பள்ளி வளாகத் தில் நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது.

இதில் பங்கேற்ற சிறப்பு விருந் தினர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் என 8,000 பேருக்கு இயற்கை உரங்களைப் பயன் படுத்தி விளைவிக்கப்பட்ட கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களில் தயாரித்த உணவு வழங்கப்பட்டது.

விழா ஏற்பாட்டாளர்களான பூவுல கின் நண்பர்கள் குழுவினர், நல்ல சோறு அமைப்பினர் ஆகியோர், இயற்கையாக விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகளை தேடிச் சென்று வாங்கியுள்ளனர். ஆந்திர மாநிலத்திலிருந்து பனிவரகு, குதிரைவாலி, கம்பு, திணை, ஓசூரி லிருந்து பீர்க்கங்காய், தக்காளி, பூண்டு, இஞ்சி, புடலை, சின்ன வெங்காயம் போன்ற காய்கறிகளும், பெங்களூருவி லிருந்து ஏலக்காய், சுக்கு, சோம்பு, மிளகாய் பொடி, மஞ்சள், வெந்தயம், பட்டை ஆகியவையும், புதுச்சேரியிலிருந்து வேர்க்கடலை, திருச்செங்கோட்டிலிருந்து வெல்லம், பொள்ளாச்சியிலிருந்து செக்கில் எடுக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் தருவிக்கப்பட்டன.

இவற்றைக் கொண்டு பூவுலகின் நண்பர்கள், நல்லசோறு அமைப்புச் சேர்ந்த 140 பேர், பள்ளியின் சமையல் பணியாளர்கள் 60 பேர் இணைந்து, தூதுவளை சூப், திணை அல்வா, உருளைக்கிழக்கு கட்லெட், அன்னப்பொடி சாமைச் சோறு, குதிரைவாலி பிரியாணி, வாழைத்தண்டு தயிர் பச்சடி, கேழ்வரகு பாயசம், மாப்பிள்ளை சம்பா அவல், கம்பு, வல்லாரை தோசை, நிலக்கடலை சட்னி, கதம்பக் காய்கறிக் கூட்டு உள்ளிட்ட வற்றைத் தயாரித்துள்ளனர்.

“பள்ளியில் இயற்கை உணவு தயாரிக்கப்பட்டு, 8,000 பேருக்கு பரிமாறப்பட்டது இங்குதான் முதன் முறையாக இருக்கும்” என விழாவில் பேசிய எழுத் தாளர் ஞாநி, சித்த மருத்துவர் கு.சிவ ராமன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

எதையும் வீணாக்காமல், அனைத்தையும் மீண்டும் பயன் படுத்தும் ‘ஜீரோ வேஸ்ட்’ திட்டத்தின் படி, சமையலுக்குப் பயன்படுத்திய காய்கறிக் கழிவுகள், உணவுக் கழிவு கள் தனியாகவும், பாக்குமட்டை தட்டுகள் தனியாகவும் சேகரிக்கப் பட்டு, அவற்றை இயந்திரம் மூலம் கூழாக்கி, இயற்கை உரமாக மாற்றி, மீண்டும் மண்ணிலேயே செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் துளசிதாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x