Published : 06 Jan 2015 02:31 PM
Last Updated : 06 Jan 2015 02:31 PM
மேட்டூர் அணையில் இருந்து மேலும் 40 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள 42,736 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக 15.8.2014 முதல் ஏற்கெனவே தண்ணீர் திறந்து விடப்பட்டு, அப்பகுதிகளில் பாசனங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது அப்பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெல், விளைச்சலுக்கு தயாராகாத நிலையில் உள்ளதால் 7.1.2015 முதல் 15.2.2015 வரை மேலும் 40 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களது வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்காக 7.1.2015 முதல் 15.2.2015 வரை மேலும் 40 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள 42,736 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT