Published : 02 Jan 2015 10:45 AM
Last Updated : 02 Jan 2015 10:45 AM
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.பார்மஸி முடித்த, ஆங்கிலப் புலமையுடன் 3 ஆண்டு அனுபவம், வயது 26-32 உடைய ஆண்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
விண்ணப்பத்துடன் அசல் கல்விச் சான்று, அனுபவச் சான்று, பாஸ்போர்ட் மற்றும் அவற்றின் நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 5 போட்டோ ஆகியவற்றுடன் ஜனவரி 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு 044-22502267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், www.omcmanpower.com என்ற இணையதளத்தையும் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT