Published : 05 Jan 2015 09:37 AM
Last Updated : 05 Jan 2015 09:37 AM
ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு அதிகரிக்கப்படுமா? என்று தமிழக மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள் ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படு கிறது. தேர்வுமுறை மாற்றம், புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட காரணங்களி னால் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வயது வரம்பை மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் 2 ஆண்டுகள் உயர்த் தியது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை யில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இணையானதாக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு கருதப்படுகிறது. இந்த தேர்வு மூலமாக, துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங் களின் துணை பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதி வாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, கோட்ட தீய ணைப்பு அலுவலர் (டிஎஃப்ஓ) ஆகிய 8 வகையான உயர் பதவிகள் நேரடியாக நிரப்பப்படுகின்றன.
குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியர் பணியில் சேருவோர் நிச்சயம் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதேபோல், டிஎஸ்பி ஆவோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் முடியும். இந்த உத்தரவாதம் இருப்பதால் குரூப்-1 தேர்வு மீது தமிழக மாணவ-மாணவிகள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிவாய்ப்பை இழப்பவர்களின் அடுத்த வாய்ப்பாக இருப்பதும் குரூப்-1 தேர்வுதான்.
தற்போது குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவி னருக்கு 35 ஆகவும் உள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வைப் போன்று குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. வருடந் தோறும் திட்டமிட்டபடி நடைபெறும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பல் வேறு காரணங்களை கருத்தில் கொண்டு வயது வரம்பு உயர்த்தப் பட்டிருப்பதைப் போல் தமிழக அரசும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கிறார்கள்.
புதிய குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் 2 வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன் பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT