Last Updated : 20 Jan, 2015 10:23 AM

 

Published : 20 Jan 2015 10:23 AM
Last Updated : 20 Jan 2015 10:23 AM

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டில் ரூ.125 கோடி மதிப்புள்ள 501 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது

சென்னை விமான நிலையத்தில் 2014-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.125.30 கோடி மதிப்புள்ள 501 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப் பாக சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் கடத்தி வரப்படுகிறது.

கடத்தல்காரர்களை வருவாய் புலனாய்வு துறையினர், சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் இருந்து தங் கத்தை பறிமுதல் செய்கின்றனர். தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. ஆனாலும் வெளிநாடு களில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலை தடுக்க, சுங்கத் துறையில் பணி யிடங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு, தங்கத்தின் மதிப்பில் 10 சதவீதத்தை சுங்கவரியாக செலுத்த வேண்டும். எனவே சுங்கவரி செலுத்தாமல், திருட்டுத்தனமாக தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 2013-ம் ஆண்டில் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள 200 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் ரூ.125.30 கோடி மதிப்புள்ள 501 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x