Published : 09 Jan 2015 10:35 AM
Last Updated : 09 Jan 2015 10:35 AM
பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட பாஜக வர்த்தக அணித் தலைவர் முத்துராமன் (44), கடந்த 2-ம் தேதி லாலாவிளை பகுதியில் வெட்டப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ ஆகியவை உடைக்கப்பட்டன. குறிப்பிட்ட சமூகத்தினரின் 10-க்கும் மேற் பட்ட வீடுகள் கல்வீசி தாக் கப்பட்டன. போலீஸாரின் துரித நடவடிக்கையால் பதற்றம் தணிந்தது.
முத்துராமனை தாக்கியதாக, இளங்கடையைச் சேர்ந்த மைதீன்கான் மகன் மாஹீன் (29), வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்த சையது முகமது மகன் தர்வேஸ் (27) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாஹீன் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆட்டோ டிரைவர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர். ஆர்எஸ்எஸ் பேரணியில் முத்துராமன் சீருடை அணிந்து பங்கேற்ற புகைப்படத் தொகுப்பு, கைது செய்யப்பட்டவர்களின் செல்பேசியில் இருந்ததும், அவற்றை வாட்ஸ் அப் மூலம் அவர்களது அமைப்பை சேர்ந்த பலருக்கு அனுப்பியிருந்ததும் தெரியவந்துள்ளது.
கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருக்கும் நசீர் என்பவர்தான் இத்தாக்குதல் சம்பவத்துக்கு திட்டம் தீட்டிய தாகவும், இடலாக்குடியை சேர்ந்த தாகீர், தவ்ஹீத், வெள்ளாடிச்சி விளையைச் சேர்ந்த அஸ்ரப் அலி, ஹக்கீம் ஆகியோர் இவ்வழக்கில் தேடப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT