Published : 10 Jan 2015 10:52 AM
Last Updated : 10 Jan 2015 10:52 AM
அம்மா சிமென்ட் விற்பனை தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது. திருச்சியில் கடந்த ஐந்து நாட்களில், ஐந்து லட்சம் கிலோ (10 ஆயிரம் மூட்டை) அம்மா சிமென்ட் விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களில் குறிப்பாக சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்ததால், சாதாரண நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில், சிமென்ட் விற்பனை செய்யத் தமிழக அரசு சார்பில், அம்மா சிமென்ட் விற்பனைத் திட்டம் கடந்த 5-ம் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, 100 சதுர அடிக்கு 50 மூட்டை வீதம், 1,500 சதுர அடி வரை கட்டுவோருக்கு, 50 கிலோ அடங்கிய மூட்டை 190 ரூபாய் வீதம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாடு சிமென்ட் கழகம் இத்திட்டத்தை செயல் படுத்துகிறது. முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5-ம் தேதி இத்திட்டம் அறிமுகமானது.
இந்நிலையில், இன்று முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா சிமென்ட் விற்பனை விரிவுபடுத்தப் படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 33 மண்டலங் களிலுள்ள கிடங்குகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் ஒன் றிய அளவிலான கிடங்குகள் என மொத்தம் 470 கிடங்குகளில், வீடு கட்டுவோர் உரிய சான்றிதழ்கள் பெற்று, வரைவோலை எடுத்துச் சென்று அம்மா சிமென்ட் வாங்க லாம்.
இதுகுறித்து தமிழ்நாடு சிமெண்ட் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது,‘திருச்சியில் கடந்த ஐந்து நாட்களில் 5 லட்சம் கிலோ (10 ஆயிரம் மூட்டை) சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு தேவையான சிமென்ட் மூட்டை கள், லாரிகள் மூலம் எடுத்துச் செல் லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள் ளன.
அரசு அறிவித்தபடி இன்று (10-ம் தேதி) அனைத்து மாவட்டங் களிலும் சிமென்ட் விற்பனைத் தொடங்கும். இதன் மேற்பார் வைப் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் மேற்கொள் வர்’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT