Published : 13 Jan 2015 09:10 AM
Last Updated : 13 Jan 2015 09:10 AM

விருதுநகரில் மேலும் 8 போலி டாக்டர்கள் கைது

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 போலி டாக்டர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கைதான போலி டாக்டர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர் கள் முதலில் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்தது. இதைடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மட்டுமே படித்துவிட்டு மருத்துவர்களிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய அனுபவத்தில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட் டுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து, கோவிலூரைச் சேர்ந்த சிவன்ராஜா (50) என்பவரை சேத்தூர் போலீஸாரும், அருப்புக்கோட்டை டி.வி.ஆர். நகரைச் சேர்ந்த ஸ்டெல்லா (46) என்பவரை மல்லாங்கிணறு போலீஸாரும், விஸ்வநத்தத்தைச் சேர்ந்த முத்துச்செல்வி (27), மாரீஸ்வரன் (33) ஆகியோரை சிவகாசி நகர் போலீஸாரும் நேற்று கைது செய்தனர்.

மேலும், சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த பேபிடெல்பி (44) என்பவரை சிவகாசி கிழக்கு போலீஸாரும், செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த ஆனந்தன் (54) என்பவரை பந்தல்குடி போலீஸாரும், ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் (76), கன்னிச்சேரியைச் சேர்ந்த சிபிரியல்கான் (44) என்பவரை வச்சக்காரப்பட்டி போலீஸாரும் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் மூலம் வீடியோ படக்காட்சிகள் விழிப்புணர்வு பணிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x