Published : 05 Jan 2015 10:29 AM
Last Updated : 05 Jan 2015 10:29 AM
திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கம்பங்காடு அருகேயுள்ள மேல பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர் கள் 35 பேர் ஜனவரி 2-ல் தைபூசத்தை ஒட்டி பழநி முருகன் கோயி லுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
இவர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் மணப்பாறை அருகே முள்ளிப்பாடி என்ற இடத்தில் பாத யாத்திரையாக சென்று கொண் டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று பயங்கர வேகத்தில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில், மேலப் பாடியைச் சேர்ந்த தங்கராசு (42), பிச்சைமுத்து (25), பெண் பக்தர் வைரக்கண்ணு (40) ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப் பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்த வையம்பட்டி போலீ ஸார் 3 பேர் உடலையும் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருச்சி காவிரி பாலம் அருகே சமயபுரத்துக்கு பாத யாத்திரையாக சென்ற பட்டுக் கோட்டையைச் சேர்ந்த பெண் பக்தர் மூக்காயி (45) தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். இந்நிலையில் அதற்கு மறுநாளே பழநிக்கு பாதயாத்திரை சென்ற மேலும் 3 பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT