Published : 07 Jan 2015 09:41 AM
Last Updated : 07 Jan 2015 09:41 AM

நித்யானந்தா ஆசிரமத்தில் இறந்த இளம்பெண் சடலம் மீண்டும் பிரேத பரிசோதனை

திருச்சி அருகிலுள்ள நவலூர் குட்டப் பட்டு மேலத் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது மகள் சங்கீதா(24). இவர் கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த டிச.28-ம் தேதி ஆசிரம நிர்வாகிகள் சங்கீதாவுக்கு உடல் நலம் இல்லாததால் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பலனின்றி இறந்து விட்ட தாக தெரிவித்து, சங்கீதாவின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

டிச. 30-ம் தேதி சங்கீதாவின் சடலத்தை திருச்சிக்கு எடுத்து வந்த பெற்றோர், இறுதிச் சடங்குகள் செய்யும்போது, அவரது உடலில் சில காயங்கள் இருந் ததை பார்த்துள்ளனர். பின்னர், மயானத் தில் புதைத்துவிட்டனர்.

இந்நிலையில் சங்கீதா சாவில் சந்தேகமடைந்த பெற்றோர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சம்பவம் பெங்களூரு வில் நடைபெற்றதால் அங்கு புகார் அளிக்கு மாறு போலீஸார் தெரிவித்துள் ளனர்.

இதைத் தொடர்ந்து, சங்கீதாவின் பெற்றோர் கர்நாடக மாநிலம் ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்வதற்காக கர்நாடக மாநில காவலர்கள் நேற்று திருச்சிக்கு வந்தனர்.

திருச்சியில், ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் போலீஸா ருடன் ஆலோசனை மேற் கொண்ட பின்னர், புதைக்கப்பட்ட சங்கீதா வின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கு மாறு வருவாய் கோட்டாட்சி யரிடம் கர்நாடக மாநில போலீஸார் மனு அளித்தனர்.

சங்கீதா புதைக் கப்பட்ட இடத்தி லேயே வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு இன்று பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x