Published : 29 Jan 2015 10:09 AM
Last Updated : 29 Jan 2015 10:09 AM

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக கட்சிகள் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண் டும் என்று திமுக, தேமுதிக, காங் கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியு றுத்தியுள்ளனர்.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகளை கட்டும் முயற்சியை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் காவிரி பங்கீட்டு குழுவினை உடனே அமைக்கக் கோரியும், காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தியும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட அனைத்து விவ சாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப் புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற் றனர். அவர்கள் பேசியதாவது:

டி.கே.எஸ் இளங்கோவன் (திமுக அமைப்பு செயலாளர்):

உலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக இருந்ததற்கு விவசாயத் துறையே காரணமாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இருக்கும் விவசாயத்தை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவி ரிக்கு குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை தடுக்க, மத்திய அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழக விவசாயிகளை பாதுகாக்க தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மல்லை சத்யா (மதிமுக துணை பொதுச்செயலாளர்):

காவிரி பிரச்சினை வெறும் விவசாயி களின் பிரச்சினை அல்ல. தமிழகத் தில் உள்ள 5 கோடி மக்களின் வாழ் வாதார பிரச்சினையாகும். காவிரியில் புதியதாக 2 அணை கள் கட்டுவதை மத்திய அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும். மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தினால், தஞ்சை பாலை வனமாகி விடும்.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்):

காவிரி குறுக்கே புதிய அணைகள் கட்டினால் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மீத்தேன் எரிவாயு திட்டம் கொண்டு வந்தால் 100 கிராமங்கள் அழிந்து போகும். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகும். எனவே, டெல்டா விவசாயிகளின் பிரச்சினையை ஒட்டுமொத்த தமிழர் களின் பிரச்சினையாகக் கருதி அனைவரும் இணைந்து போராட் டங்களை நடத்த வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. சார்பில் எம்.எல்.ஏ. அருள் செல்வன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன், தமிழ் மாநில காங் கிரஸ் சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், இந்திய தேசிய லீக் பொது செயலாளர் நிஜாமுதீன், வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநரிடம் மனு

ஆர்ப்பாட்டத்துக்குப் பின் அனைத்துக் கட்சித் தலைவர்களும், விவசாய சங்கங்களின் பிரதிநிதி களும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். அங்கு ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x