Published : 03 Jan 2015 10:05 AM
Last Updated : 03 Jan 2015 10:05 AM

கிருஷ்ணகிரி அருகே லாரி - கார் மோதல்: தீயில் சிக்கி செல்போன் வியாபாரி உட்பட 2 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே நேற்று அதி காலை லாரி மீது கார் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப் பிடித்து எரிந்தன. காரில் இருந்த கோவையைச் சேர்ந்த இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நூலப்பள்ளி கிராமத் தைச் சேர்ந்தவர் சங்கரய்யா (35). லாரி ஓட்டுநர். இவரது உதவி யாளர் நரேஷ் (28). இருவரும் நேற்று முன்தினம் திருப்பூர், ஊத் துக்குளி ஆகிய இடங்களில் கொப் பரை தேங்காய் பாரத்தை ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அணை இணைப்பு சாலை அருகே வரும் போது லாரியில் பழுது ஏற்பட்டு சப்தம் கேட்டுள்ளது. இதனால் பழுது பார்க்க லாரியை மீண்டும் காவேரிப்பட்டணம் நோக்கிச் செல்ல ஓட்டுநர் வளைத்துள்ளார்.

கோவை துடியலூர் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஆண்டனிராஜ் (30), தனது நண்பர் ரெஜிராசுடன் காரில் பெங்க ளூரு நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார். நாட்டான் கொட்டாய் இணைப்பு சாலை அருகே கார் வந்த போது, சாலை யில் திரும்பிக் கொண்டிருந்த லாரியின் டீசல் டேங்க் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரும், லாரியும் தீப்பிடித்துக் கொண்டன. இந்த விபத்தில் காரில் இருந்த ஆண்டனிராஜூம், அவரு டைய நண்பர் ரெஜிராசும் வெளியே வர முடியாமல் காருக் குள்ளேயே சிக்கி உடல் கருகி இறந்தனர். லாரி ஓட்டுநர் சங்க ரய்யா, உதவியாளர் நரேஷ் தீ காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். விபத்து காரணமாக சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீட்பு வாகனம் தாமதம்

தருமபுரி மாவட்டம் தொப்பூர் முதல் கிருஷ்ணகிரி மோட்டூர் வரை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் தொப்பூர் சுங்கச்சாவடி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்-லாரி விபத்து குறித்து பெங்களூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஆனால், விபத்து நடந்த பகுதி தொப்பூர் சுங்கச்சாவடி கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி மீட்புப் பணிக்கு மறுத்துள்ளனர்.

இதனால் தொப்பூரிலிருந்து மீட்பு வாகனம் வர நீண்ட நேரம் ஆனது. அதற்குள் சாலையின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x