Last Updated : 13 Jan, 2015 07:01 PM

 

Published : 13 Jan 2015 07:01 PM
Last Updated : 13 Jan 2015 07:01 PM

க.அன்பழகன் என்ன வழக்கறிஞரா?- ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட் கேள்வி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தம்மை சேர்த்துக்கொள்ளு மாறு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “மனுதாரர் அன்பழகன் எங்கே? கடந்தமுறையே நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று கூறியிருந்தேனே? வழக்கு விசாரணைக்கு வரும்போது மனுதாரர் நீதிமன்றத்துக்கு வர வேண்டியது அவசியம் என்று அவருக்குத் தெரியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அத‌ற்கு அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன், “குற்றவியல் நடைமுறைச்சட்ட பிரிவு 301(2)-ன் கீழ், மனுதாரரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இருந்தால் போதும். அன்பழ கனுக்கு 93 வயதாகிவிட்டது. அவர் சென்னை யில் இருக்கிறார்” என்றார். அதற்கு நீதிபதி, “நீங்கள் சொல்லும் சட்டப்பிரிவு சிவில் வழக்குகளுக்குதான் பொருந்தும். கிரிமினல் வழக்குகளுக்கு பொருந்தாது” என்றார்.

மேலும் நீதிபதி, “நீங்கள் தாக்கல் செய்த மனுவை எடுத்துப் படியுங்கள்” என்றார். அப்போது அந்த மனு கிடைக்காமல் திமுக வழக்கறிஞர்கள் தடுமாறினர். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, தனது கையில் இருந்த மனுவை கொடுத்தார். அதை அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன் படித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கில் 3-ம் தரப்பாக இணைத்துக்கொள்ளவும், அரசு வழக்கறிஞருக்கு உதவவும் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இவ்வழக்கில் அரசு வழக் கறிஞராக நியமிக்கும்படி மட்டும்தான் நீங்கள் கேட்கவில்லை. இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும்போது மனுதாரர் அன்பழகன் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்” என கடிந்துகொண்டார்.

திமுகவை எதிர்க்கும் பவானிசிங்

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் கூறும்போது, “சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் திமுகவை 3-ம் தரப்பாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உதவிட, அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ். மரடி இருக்கிறார். எனவே திமுகவின் உதவி தேவையில்லை” என்றார்.

இதேபோல ஜெயலலிதாவின் தரப்பில் வழக்கறிஞர் மணிசங்கர் கூறும்போது, “இவ் வழக்கில் திமுகவின் பங்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துடன் முடிந்துவிட்டது. மேல்முறையீட்டு விசாரணையில் பங்கேற்க சட்டத்தில் அவர்களுக்கு உரிமையில்லை. எனவே அவர்களை வழக்கில் 3-ம் தரப் பாகவும், அரசு வழக்கறிஞருக்கு உதவவும் அனுமதிக்க கூடாது” என்றார்.

சுப்பிரமணியன் சுவாமி எங்கே?

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமாரசாமி, “உங்களுடைய மனுக் களை கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி தாக்கல் செய்யுங்கள். ஜெயலலிதா தரப்பு வாதத்தின் இடையே அவற்றை விசாரிக்கிறேன்” என்றார்.

மேலும் அவர், “வழக்கின் முதல்நாளில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு முறையிட்ட சுப்பிரமணியன் சுவாமி எங்கே? அதன்பிறகு அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, கர்நாடக உயர் நீதி

மன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. அவர் ஏதேனும் மனு தாக்கல் செய்யவுள் ளாரா?” என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங், “சுப்பிரமணியன் சுவாமி தலைமறைவாகி விட்டார்” என்றார். இதனால் நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x