Published : 11 Jan 2015 11:31 AM
Last Updated : 11 Jan 2015 11:31 AM
சென்னையில் தனியார் நிறுவன இயக்குநர் தான் செலுத்த வேண்டிய வருமான வரியை குறைத்து செலுத்து வதற்காக ரூ.8 லட்சம் லஞ்சம் வழங்கியபோது, அதை பெற்ற இரு வருமான வரித்துறை அதிகாரிகள் உட்பட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை இணை ஆணையர்களாக பணிபுரிவர்கள் சல்லான் மற்றும் சஞ்சய். இவர்கள் சென்னை தி.நகரில் உள்ள பன்டாரி அன்டு கோ நிறுவனத்தின் இயக்குநர் ஹித்தேஷ், அவரது வருமான வரியை குறைத்து செலுத்த சல்லான் மற்றும் சஞ்சய் ஆகியோர் உதவியதாக கூறப்படுகிறது. அதற்காக அவர்களை நேற்று தனது நிறுவனத்துக்கு வரவழைத்த ஹித்தேஷ், அவர்களிடம் ரூ.8 லட்சத்தை லஞ்சமாக வழங்கியுள்ளார். இதை அறிந்த சிபிஐ அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று இரு வருமான வரித்துறை அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரி ஹித்தேஷ், பணம் கை மாற உதவிய மற்றொரு நபர் என மொத்தம் 4 பேரை நேற்று கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகள் உட்பட 9 இடங்களில் திடீர் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி சென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT