Published : 05 Jan 2015 08:52 AM
Last Updated : 05 Jan 2015 08:52 AM

கடந்த 10 ஆண்டுகளில் காணாமல்போன குழந்தைகளை மீட்க தொடங்கியது ‘ஆபரேஷன் ஸ்மைல்’: மாவட்டந்தோறும் தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரம்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைதற்காக ‘ஆபரே ஷன் ஸ்மைல்’ எனும் அதிரடி நடவடிக்கையை மாவட்டந் தோறும் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

பள்ளி செல்ல விருப்பமின்றி வெளியூருக்கு ஓடுதல், பெற்றோ ருக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறுதல், பயணங்களின் போது உறவுகளிடமிருந்து எதிர்பாராமல் பிரிந்துவிடுதல், மர்மநபர்களால் கடத்தப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் காணா மல்போகும் குழந்தை களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காவல் நிலையங்களில் இதுதொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டாலும் குழந்தைகளை மீண்டும் கண்டுபிடிக்க முடிவ தில்லை. எனவே குழந் தைகள் மாயம் தொடர்பாக தமிழக காவல்துறையில் நூற்றுக் கணக்கான வழக்குகள் நிலுவை யில் உள்ளன.

தனிப்படைகள் அமைப்பு

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடித்து மீட்பதற்காக ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என பெயரிடப்பட்ட புதிய நடவடிக்கையை தமிழக காவல்துறை தற்போது மேற் கொண்டுள்ளது. இதற்காக அனைத்து மாநகரம், மாவட்டங் களிலும் குறைந்தபட்சம் 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல்போன 18 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியரின் பெயர், புகைப்படம், அடையாளம், முகவரி போன்ற முழு விவரங்களையும் காவல் நிலையம் வாரியாக சேகரித்து வருகின்றனர்.

விவரங்கள் சேகரிப்பு

இதுதவிர ஆதரவற்றோர் பள்ளிகள், இல்லங்கள், தனியார் காப்பகங்களில் தங்கி யுள்ள குழந்தைகள், சாலை களில் ஆதரவற்று திரியும் குழந்தைகள் குறித்த விவரங் களையும் புகைப்படத் துடன் சேகரித்து வருகின்றனர். மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த பணி தற்போது வேகமாக நடைபெற்றுவருகிறது.

மதுரை மாவட்டத்தின் தனிப்படை செயல்பாடுகள் பற்றி மதுரை எஸ்.பி. விஜயேந்திரபிதாரி கூறும்போது, மதுரை மாவட்டத்தில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டத்துக்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில் காணாமல்போன 32 குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இம்மாத இறுதி வரை முதற்கட்ட பணிகள் தொடர்கின்றன. அடுத்த கட்டமாக சேகரித்த விவரங்களை மற்ற மாவட்ட, சரக, மண்டல காவல்துறையுடன் இணைந்து ஒப்பிட்டு பார்க்க உள்ளோம்.

இவ்வாறு செய்யும்போது காணாமல்போன குழந்தைகளில் சிலரையாவது மீட்டு, நிச்சயம் பெற்றோரிடம் ஒப்படைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x