Published : 20 Jan 2015 10:26 AM
Last Updated : 20 Jan 2015 10:26 AM

கோடை விழாவுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா: ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்க ஏற்பாடு

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் வரும் மே மாதம் 54-வது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்க தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், வெளிமாநிலங்களில் இறக்குமதி செய்த பூஞ்செடி நாற்றுகளை நடவுசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானலில் தற்போது குளிர்கால சீசன் நிலவுகிறது. ஐரோப் பாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இந்த சீசனை அனுபவிக்க, தற்போது கொடைக்கானலில் குவிந்து வரு கின்றனர். இந்த சீனில் கடும் குளிரும், பனியும் நிலவுவதால் உள்நாட்டு பயணிகள், விடுமுறை நாட்களில் மட்டும் கொடைக்கானல் வந்து செல்கின்றனர். வரும் மார்ச் முதல் கோடை சீசன் கொடைக்கானலில் களை கட்டத் தொடங்கிவிடும். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க, ஒவ்வொரு ஆண்டும் பிரையன்ட் பூங்காவில், கோடை விழா மலர் கண்காட்சி கோலாகலமாக நடத்தப் படுகிறது.

இந்த ஆண்டு மே மாதம், 54-வது கோடை விழா மலர் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில், ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பிரையன்ட் பூங்காவில், தற்போது 90 வகை பூஞ்செடி நாற்று களை நடவுசெய்யும் பணியில் தோட் டக்கலை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரையன்ட் பூங்கா தோட்டக்கலை அலுவலர் எபன் ஞானராஜன் கூறும்போது, கோடை மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில், இந்த ஆண்டு 90 வகையான பூஞ்செடிகளை நடவு செய்ய உள்ளோம். ஆரம்பக் கட்டமாக தற்போது, அல்ட்ரோ மேரியா, பிங்க் காஸ்டர், சாலிவியா, டேலியா, டெல்பினியம் உள்ளிட்ட 23 வகையான நீண்டநாள் பூக்கக்கூடிய ஒன்றரை லட்சம் பூஞ்செடி நாற்று களை நடவு செய்துள்ளோம். இந்த பூஞ்செடிகளில் தொடர்ந்து 8 மாதம் வரை பூக்கள் பூத்துக் குலுங்கும். பூக்கள் உதிர்ந்து விழவிழ மீண்டும் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

‘பாடர் கிராப்ஸ்’ பூஞ்செடிகளான ஷிப்டன், வெர்பினியா, கோல்டன் ராடு உள்ளிட்ட பூஞ்செடிகளை பிரையன்ட் பூங்கா வரப்புகளில் நட்டுள்ளோம்.

இந்த செடிகளை கொல்கத்தா, ஊட்டி, பெங்களூருவில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். பிப்ரவரி, மார்ச் மாதத்துக்குள் 3 லட்சம் பூஞ்செடிகளை நட்டு விடு வோம். மே மாதம் நடக்கும் கோடை விழா மலர் கண்காட்சியில் இந்த பூஞ்செடிகள் வளர்ந்து ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்கும் என்றார்.

கடந்த ஆண்டு பருவமழையின்றி கடும் வறட்சி நிலவியதால், பூஞ்செடி களில் எதிர்பார்த்த அளவு பூக்கள் பூக்கவில்லை. அதனால், மலர் கண்காட்சிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு பரவலாக மழை பெய் துள்ளது. அதனால் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்க வாய்ப்புள்ளதால், மலர் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பை பெறும் என தோட்டக்கலை அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x