Published : 11 Jan 2015 11:07 AM
Last Updated : 11 Jan 2015 11:07 AM
அதிமுகவின் 4-வது கட்ட அமைப் புத் தேர்தல் வருகிற 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையும், 9-வது கட்ட தேர்தல் மார்ச் 15 முதல் மார்ச் 17 வரையும் நடைபெற உள்ளன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு விவரம்: அதிமுகவின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்புத் தேர்தல்களில், தற்போது வரை 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந் துள்ளன.
இந்த நிலையில், 4-வது கட்டமாக ஜன. 23-ம் தேதி முதல் ஜன. 27-ம் தேதி வரை விழுப்புரம் வடக்கு, தெற்கு, தருமபுரி, சேலம் மாநகர், புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங் களுக்கு உட்பட்ட கட்சியின் கிளை நிர்வாகிகள், ஊராட்சி செயலர்கள், நகரம் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பகுதிகளுக்கு உட்பட்ட வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். இவற்றுக்கான தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதேபோல, மேற்கண்ட 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு, மார்ச் 15 முதல் மார்ச் 17-ம் தேதி வரை தேர்தல் நடைபெறும். இந்த 9-வது கட்ட தேர்தல்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்களே நடத்துவர்.
முழு ஒத்துழைப்பு தேவை
அமைப்புத் தேர்தல்கள் சுமுகமாக நடைபெறும் வகையில் மண்டலத் தேர்தல் பொறுப்பா ளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப் பாளர்கள், தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு, கட்சித் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT