Published : 04 Jan 2015 11:56 AM
Last Updated : 04 Jan 2015 11:56 AM

மின் விநியோகம், பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு: டெல்லியில் 12-ம் தேதி முக்கிய ஆலோசனை

மின் விநியோக முறைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக மின்துறை தலைமை ஆய்வாள ருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி யுள்ளது.

நாடு முழுவதும் மின் உற் பத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் மத்திய மின்சார சட்டத்தின்படி செயல் படுத்தப்படுகின்றன. மாநில மின் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக மத்திய மின்சார ஆணையம் செயல்படுகிறது. மின் விநியோகம், கம்பியமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு முறைகள் குறித்த விதிகளை மத்திய மின்சார ஆணையம் வகுத்துள்ளது. இந்த நடைமுறைகள் மாநிலங்களின் தலைமை ஆய்வாளர் தலைமை யிலான மின்சார ஆய்வுத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்த விதிமுறைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.

இந்த அடிப்படையில், தற்போது மின் விநியோகம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர மத்திய மின்சார ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினரின் கருத்து களை ஆணையம் சேகரித்துள் ளது.

தற்போது மாநிலங்களின் கருத்தைக் கேட்க, வரும் 12-ம் தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், அனைத்து மாநிலங்களின் தலைமை மின்துறை ஆய்வா ளர்கள் பங்கேற்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி, இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமை மின் துறை ஆய்வாளர் அப்பாவு பங்கேற்று, விதிமுறைகள் மாற்றம் தொடர்பான மாநில அரசின் கருத்தை தெரிவிக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x