Published : 03 Jan 2015 10:03 AM
Last Updated : 03 Jan 2015 10:03 AM

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி: துரைமுருகனுக்குப் பதிலாக ஐ.பெரியசாமி - பொதுக்குழுவில் தேர்வாகலாம் என தகவல்

திமுக பொதுக்குழுவில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

திமுக-வின் பதினான்காவது உட்கட்சித் தேர்தல்கள் கீழ்மட்ட அளவில் நடந்து முடிந்திருக் கின்றன. இதையடுத்து, ஜனவரி 9-ல் நடைபெறவிருக்கும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி யின் தலைவர், பொதுச்செய லாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அப்போது, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப் படவிருப்பதாக திமுக-வின் மேல் மட்ட தகவல்கள் தெரி விக்கின்றன.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய திமுக தலைமைக் கழக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: இந்தத் தேர்தலில் கட்சியின் தலைவராக பதினோறாவது முறையாக கருணா நிதியும், பொதுச் செயலாளராக பத்தாவது முறையாக அன்பழ கனும் பொருளாளராக ஸ்டாலினும் மீண்டும் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கட்சியின் முதன்மைச் செயலாள ராக உள்ள ஆர்க்காடு வீராசாமி உடல்நலமில்லாமல் இருப்ப தால் அவரை அந்தப் பொறுப்பி லிருந்து விடுவித்து அவருக் குப் பதிலாக துரைமுருகனை முதன் மைச் செயலாளராக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மகளிர் பிரதிநிதித்துவத்தில் துணைப் பொதுச் செயலாள ராக உள்ள சற்குண பாண்டியன் ஏற்கெனவே தன்னை பொறுப் பிலிருந்து விடுவிக்கும்படி தலை மைக்கு கடிதம் கொடுத்திருந் தார். நாடார் சமூகத்துக்கு தலை மைக் கழக நிர்வாகிகளில் பிரதி நிதித்துவம் வேண்டும் என்பதால் அவரை விடுவிக்காமல் வைத்திருக் கிறார்கள். ஒருவேளை இம்முறை அவர் விடுவிக்கப்பட்டால் அவ ருக்குப் பதிலாக சுப்புலட்சுமி ஜெகதீசன் துணைப் பொதுச் செய லாளர் ஆக்கப்படலாம்.

கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப் படலாம் என்ற பேச்சும் முன்பு இருந்தது. ஆனால், இந்தமுறை கனிமொழி கட்சியின் உயர்மட்ட அமைப்பில் எந்தப் பதவியும் கேட்டு அழுத்தம் கொடுக்கவில்லை. தலித் பிரதிநிதித்துவத்துக்கு துணைப் பொதுச் செயலாளராக வி.பி. துரைசாமி இருக்கிறார். அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை துணைப் பொதுச் செயலாளராக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், திமுக-வின் உயர்மட்டப் பொறுப்பில் முக்குலத் தோருக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. இதை சரிசெய்யும் விதமாக, துரைமுரு கன் வசம் உள்ள துணைப் பொதுச்செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் ஐ.பெரிய சாமிக்கு கொடுப்பதற்கு கிட்டத் தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x