Published : 18 Jan 2015 12:58 PM
Last Updated : 18 Jan 2015 12:58 PM

ஜல்லிக்கட்டு நடைபெறாததால் சோகத்தில் மூழ்கிய அலங்காநல்லூர்

உலகப்புகழ் பெற்ற பாரம்பரிய ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடக்காத நிலையில் போலீஸ் குவிப்பு, கருப்புக்கொடி, ஆர்ப்பாட்டம் என அலங்காநல்லூர் சோகத்தில் மூழ்கியது. பூஜைகள் நிறுத்தப்பட்டதால், தெய்வ குற்றத்தை தடுக்க இம்மாதத்துக்குள் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென கிராமத்தினர் கெடுவிதித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் பல நூற்றாண்டுகளாக தை 3-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. நீதிமன்றத் தடையால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. பல்வேறு பிரச்சினைகளால் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நிறுத்தப் பட்டபோதும், அலங்காநல்லூரில் தொடர்ந்து நடந்துவந்த ஜல்லிக் கட்டு இந்தாண்டு உச்ச நீதிமன்றத் தடையால் நின்றுபோனது.

காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து காளைகளை நீக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆனாலும் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற் பட்டதால் அவனியாபுரம், பாலமேட் டில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் அனுமதி கிடைத் தாலும் நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்தும் முடிவில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி திட்டமிட்டிருந்தது.

இந்த அனுமதி கிடைக்கவில்லை என்பது உறுதி யானதும் ஜல்லிக்கட்டு வாடிவாசல், ஜல்லிக்கட்டு திடல் என அலங்கா நல்லூரில் திரும்பிய பக்கமெல் லாம் 500 போலீஸார் நிறுத்தப்பட் டிருந்தனர். காளைகளை யாரும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பகுதிக்குள் கொண்டுவருவதை தடுக்க போலீஸார் ஊர் எல்லையி லேயே தடுப்புகளை அமைத்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அரசு முழுமையாக ஆதரவு தெரிவிப்ப தால் தற்போதைய நிலைக்கு அலங்காநல்லூர் கிராம ஜல்லிக் கட்டு விழா கமிட்டி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. முத்தாலம்மன், முனியாண்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் 3 கோயில் காளைகள் பங்கேற்கும். பூஜை முடிந்ததும் கோயில் காளைகள் ஜல்லிக்கட்டு வாடிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவிழ்த்துவிடப்படும்.

இதன் பின்னர் மற்ற காளைகள் அவிழ்க்கப்படும். மற்ற காளைகள் வர முடியாத நிலையில், கோயில் காளைகளை அவிழ்த்துவிட்டால் ஜல்லிக்கட்டு நடந்துவிட்டதாகிவிடும். இதை தவிர்க்க கோயில் பூஜைகளை கிராமத்தினர் ரத்து செய்ததுடன், கோயில் காளைகள் வாடிவாச லுக்கே வராது என அறிவித்தனர்.

அரசுக்கு நிபந்தனை

அரசு மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டாலும், நேற்று கிராம கமிட்டி சார்பில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது. தை மாதத்துக் குள் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத் தியாக வேண்டும் என்பதுதான் அது. இல்லாவிடில், இந்தாண்டு ஜல்லிக் கட்டு நின்றுபோனதாகிவிடும. இதனால் தெய்வக்குற்றம் ஏற்பட்டு, மக்களுக்கு பல்வேறு வியாதிகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும்.

மேலும் தொடர்ந்து நடந்துவந்த ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டுவிட்டது என்ற வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்க்க தை மாதத்துக்குள் உறுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் எனக் கோரி 500-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் காவல்துறையினரிடம் நேற்று மனு அளித்தனர்.

கிராமத்தில் சோகம்

ஜல்லிக்கட்டுக்கு 3 நாட்களுக்கு முன்பே களைகட்டிவிடும் அலங்கா நல்லூரில் நேற்று திரும்பிய பக்க மெல்லாம் சோகமயமாக காட்சி யளித்தது. வீட்டு வாசல்களில் கருப்பு கோலம், கும்மி, ஒப்பாரி என பெண் கள் தங்கள் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஜல்லிக்கட்டு நடக்காததால் உற்றார், உறவினர் கள் பொங்கலுக்கு அழைக்கப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளுக்கு பின் நல்ல விளைச்சல் இருந்தும், கூட்டமே இல்லாமல் அலங்காநல்லூர் களையிழந்து காணப்பட்டது.

300 காளைகள், 500 வீரர்கள் வீடுகளைவிட்டு வெளியேறாத நிலையில், அலங்காநல்லூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி முழுவதும் சோகமாகவே காட்சியளித்தன. வாடிவாசல், கடைவீதிகளில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தன. புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, கூடுதல் எஸ்.பி. ஜான்ரோஸ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இன்றுவரை இந்த பாதுகாப்பு தொடர்கிறது. இதேபோன்று சிவகங்கை மாவட்டம், சிராவயலிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. அந்தப் பகுதியிலும் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x