Published : 11 Jan 2015 11:33 AM
Last Updated : 11 Jan 2015 11:33 AM
சமையல் காஸ் மானியத்தை வங்கியின் மூலம் பெற நுகர்வோர் கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சென்னையில் நுகர்வோர்களுக்கு நாளை சிறப்பு முகாம் நடைபெறு கிறது.
சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மத்திய அரசு வழங்கும் மானி யத்தை பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கு வதற்கு சமையல் காஸ் நுகர்வோரி டம் விண்ணப்ப படிவம் பெறவும், வங்கிக் கணக்கு இல்லாத நுகர்வோருக்கு புதிதாக கணக்கு தொடங்கவும் சென்னை மாவட்டத்தில் தொடர் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
முதல் கட்டமாக, சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மற்றும் மகாகவி பாரதியார் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமையல் காஸ் நுகர்வோர்களுக் கான சிறப்பு முகாம் 12ம் தேதி (நாளை) காலை 09.30 மணி முதல் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரிலுள்ள மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் நடக்கிறது. மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பாரத் கேஸ், இண்டேன் மற்றும் எச்.பி. கேஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் காஸ் மானியத்தை பெற, ஆதார் அட்டை இருந்தால் அதன் நகல், வங்கிக் கணக்கு எண், சமையல் காஸ் இணைப்பு புத்தகம் மற்றும் சமீபத்தில் சிலிண்டர் வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றுடனும், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல், முகவரிக்கான அடையாள சான்றின் நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் சமீபத்தில் சிலிண்டர் வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT