Published : 18 Jan 2015 12:12 PM
Last Updated : 18 Jan 2015 12:12 PM

திமுக தேர்தல் பணிக்குழு அமைப்பு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்காக முன் னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 63 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் பணிக் குழுவை திமுக அமைத்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் என்.ஆனந்த் போட்டியிடுகிறார். அவருக்காக பணியாற்ற திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. தலைவர் - கே.என்.நேரு. உறுப் பினர்கள் - ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, கே.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, சுப.தங்கவேலன், கே.ஆர்.பெரியகருப்பன், என்.சுரேஷ்ராஜன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டிபிஎம் மைதீன்கான், மா.சுப்பிரமணியன் உள்பட 63 பேர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x