Published : 01 Apr 2014 11:08 AM
Last Updated : 01 Apr 2014 11:08 AM
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விக்டரி ஜெயக்குமாரை ஆதரித்து, அக்கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் இந்தியாவை பொருளாதாரரீதியில் உயர்த்தக் கூடிய திட்டமான சேது சமுத்திரத் திட்டத்துக்கு அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.
மேலும் ஜி.கே.வாசன் பேசிய தாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நாம் எந்த கட்சியுடனும் பங்கு போட்டுக்கொள்ளாமல், தனித்து எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்யக் கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைத் துள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பு ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, காங்கிரஸ் அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவம், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகி யவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பல திட்டங்களைக் கொண்டு வரவுள்ளது.
13 கோடி மாணவர்கள் பயன் பெறுகிற, உலகிலேயே மிகப் பெரிய திட்டமான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.13,215 கோடி ரூபாயும், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதற்காக ரூ.37,300 கோடியும் ஒதுக்கியுள்ளது. 5 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸை எதிர்க்கும் அணிகள் எல்லாம் சந்தர்ப்பவாதக் கூட்டணி யாகும். இந்தியாவை பொருளாதார ரீதியில் உயர்த்தக் கூடிய திட்டமான சேது சமுத்திரத் திட்டத்துக்கு அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில் ஞானதேசிகன் பேசிய தாவது:
இத்தேர்தல் கூட்டத்தைக் கண்டால் காமராஜர் படை புறப்பட்டு விட்டதுபோல் உள்ளது. இந்த உற்சாகமும், தைரியமும் வரும் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்த லுக்கு அடித்தளமாக அமையும்.
ஒவ்வொரு மேடையிலும் ஜெயலலிதா, பாஜக-வையோ, திமுக-வையோ விமர்சிப்பதில்லை. காங்கிரஸ் கட்சியைத்தான் விமர்சித்து வருகிறார்.
இதற்கு காரணம், அதிமுக-வுக்கு பிரதான எதிரியாக காங்கிரஸ் திகழ்கிறது. அந்த வகையில் ஜெயலலிதாவின் விமர்சனத்தை வரவேற்கிறேன்.
திராவிடக் கட்சிகளால் தமிழகத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறிக்கொள்ளும் மோடியின் அமைச்சரவையிலேயே ஊழல் மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர். ஆகவே மோடி வித்தை இங்கு பலிக்காது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT