Last Updated : 07 Apr, 2014 10:59 AM

 

Published : 07 Apr 2014 10:59 AM
Last Updated : 07 Apr 2014 10:59 AM

கொசு: சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதியை உலக சுகாதார தினமாகக் கொண்டாடுகிறது. அந்நாளில் சுகாதாரம் குறித்த ஓர் கருத்தை வலியுறுத்தி மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ரத்த சோகை நோய் மற்றும் அதைத் தவிர்ப்பது குறித்தான விழிப்புணர்வுச் செய்திகள் வந்தன.

இந்த ஆண்டு, `சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்` என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. கொசுதான் இதன் இலக்கு.

சிறு பூச்சிக் கடியால் வரும் அபாய கரமான நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் அவசியத்தை இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது. கொசு, மூட்டைப்பூச்சி, உண்ணி போன்ற சிறு பூச்சிகள் கடித்தால் ஏற்படும் நோய்கள் பயங்கரமாக இருக்கும். அவற்றில் முக்கியமானது டெங்கு. இது கொசுக்கடியால் பரவுகிறது. யானைக்கால் நோயும் கொசுக்கடியால்தான் ஏற்படுகிறது.

இந்நோய்கள் நம்மைத் தாக்காமல் பாதுகாத்துக்கொள்வது அவசியம். நன்னீர்த் தேக்கங்களில் உருவாகும் கொசுக்கள் கடியால் நோய் உடலில் வேகமாக பரவிவிடும். இதிலிருந்து பாதுகாக்க வீட்டின் சுற்றுப் புறத்தைச் சுத்தமாகவும் நீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டின் இடுக்குகளிலும், சில திரையரங்கு களிலும், ரயில்களிலும் இருக்கும் மூட்டைப் பூச்சிகளும் ஒருவித நோய்த் தொற்றை ஏற்படுத்துபவைதான். எனவே வெளியூர்களில் தங்குமிடங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காகத்தான் உலக சுகாதார நிறுவனம், எளியோருக்கும் புரியும் வண்ணம் சிறிய கடி பெரிய அச்சுறுத்தல் என்ற வாசகத்தை அமைத்துள்ளது.

இச்சிறு பூச்சிகளிடமிருந்து நம்மை மட்டுமல்ல சின்னஞ்சிறு குழந்தைகளையும் காக்க வேண்டியது மிக முக்கியமானது. சிறு பூச்சிக் கடியால் பாக்டீரியாக்களும் பரவக் கூடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆரோக்கியம் விலை மதிப்பில்லாதது. அதற்கு ஒரு விலை போட்டுப் பார்த்தால் ஏற்படுவது ஆச்சரியமே.

இச்சிறு பூச்சிகளிடமிருந்து நம்மை மட்டுமல்ல சின்னஞ்சிறு குழந்தைகளையும் காக்க வேண்டியது மிக முக்கியமானது. சிறு பூச்சிக் கடியால் பாக்டீரியாக்களும் பரவக் கூடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆரோக்கியம் விலை மதிப்பில்லாதது. அதற்கு ஒரு விலை போட்டுப் பார்த்தால் ஏற்படுவது ஆச்சரியமே.

வீடு, கார், மொபைல் என்று பொருள் களை வாங்குவதிலும் அவற்றைப் பராம ரித்துப் பாதுகாப்பதிலும் நாம் நிறைய நேரமும் உழைப்பும் பணமும் செலவிடு கிறோம்.

ஆனால் நம் உடல் நலத்தைக் காப்பதில் நாம் அந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறோமா என்பதுதான் கேள்வி.

நமது உடலை எப்படிக் காத்துக் கொள்வது? பூச்சிகள் வராமல் தடுப்பதற்கு வீட்டையும் சுற்றுப்புறத் தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

நோய்க் கிருமிகளைத் தடுக்க சாணமிட்டு மெழுகுவது என்று பல முன்னேற்பாடுகளைச் செய்யலாம். தூங்கும்பொழுது கொசுவலை கட்டிக் கொசுக்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

இதுதொடர்பான விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண் டும். அக்கம்பக்கத்தவர் மீதுள்ள அக்கறை யோடு இதில் நமது பாதுகாப்பும் அடங்கி யிருக்கிறது. ஏனெனில் அங்குள்ள நோய்த் தொற்று உள்ளவரைக் கடித்த கொசு நம்மைக் கடித்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும்.

உண்ணிகள்

நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்பவர்கள் அவற்றுக்குத் தடுப்பூசிகள் போட்டிருந்தாலும், அவற்றின் மீதுள்ள உண்ணிகள் அபாயகரமானவை.

தெருநாய்கள்கூட நம் வீட்டு வாசலில் உண்ணியை உதிர்த்துவிட்டுச் சென்று விடலாம். வீட்டுக்கு உள்ளே வரும்போது நம் கால்களில் அவை ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. வெளியே சென்று விட்டு உள்ளே வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவ வேண்டும். ஸ்வைன் ஃப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க, சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவவும்.

நோய் வருமுன் காப்பதே சிறந்த சிகிச்சை என்பது பழைய மொழியாக இருந்தாலும் அதுதான் நிரந்தரமான உண்மை. இதுவே வாழ்வுக்கு உத்தரவாதம் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x