Published : 12 Jan 2015 11:57 AM
Last Updated : 12 Jan 2015 11:57 AM
ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம் (இந்துமத ஆன்மிகத் தலைமை) என்ற ஆன்மிக ஆய்வு நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
ஸ்ரீ பரப்பிரம்ம ஐந்தியல் ஆய்வு மையம், ஸ்ரீபரப்பிரம்மாலயம் அறக் கட்டளை சார்பில் ஸ்ரீ பிரம்ம வித்யா உபாசகரும், வாஸ்து மரபின் ஐந்தியல் ஆய்வருமான வி.என்.கஜேந்திர குருஜி எழுதிய “ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம்” நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இதில், முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் கலந்துகொண்டு முதல் பிரதியை வெளியிட, அதனை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.ஜெகதீசன் தலைமை உரையாற்றினார்.
ஸ்ரீபரப்பிரம்மம் உருவப்படத்தை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் திறந்து வைத்துப் பேசுகையில், “கலைக் களஞ்சியமாகவும், சிறந்த சொல் அகராதியாகவும் இந்த நூல் திகழ்கிறது. எனவே, தமிழக அரசு எல்லா நூலகங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இந்த நூலை வாங்கி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, பழனி ஸ்ரீபோகர் ஆசிரம சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், பிரம்மா குமாரி பாண்டி அபர்ணா ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். பின்னர், நூலாசிரி யர் வி.என்.கஜேந்திர குருஜி ஏற்புரை யாற்றினார். முன்னதாக, ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.கே.மூர்த்தி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT