Published : 10 Apr 2014 12:42 PM
Last Updated : 10 Apr 2014 12:42 PM

திருநங்கை கொலை: விசாரணையில் புதிய திருப்பம்: ஆட்டோ, நகைக்காக கொலை; 3 பேர் சிக்கினர்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் சதானந்தபுரத்தை சேர்ந் தவர் திருநங்கை மகபூப் பாஷா என்கிற ஜமீலா. இவருக்கும், தாங்கல் புதிய காலனியை சேர்ந்த ஆரோக்கியராஜுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு இருந்தது. செவ்வாய்க்கிழமை காலை ஜமீலா வீட்டுக்கு கத்தியுடன் சென்ற ஆரோக்கியராஜ், அவரை சரமாரியாக குத்தி கொலை செய் தார். பின்னர் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஆரோக்கிய ராஜ் சரண் அடைந்தார்.

போலீஸில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், `திருமணம் செய்ய தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்ததாக' கூறியிருந்தார். இந்நிலையில் சுதா, ஜெயா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு புதன்கிழமை காலையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறுகையில், `ஜமீலா நல்லவள். தவறான தொடர்பால் அவள் கொலை செய்யப்படவில்லை. அவளிடம் இருந்த நகைகளுக்கா கத்தான் கொலை செய்யப்பட் டிருக்கிறாள்' என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் மறுவிசாரணை நடத்தியதில் பல புது தகவல்கள் வெளிவந்துள் ளன. இதுகுறித்து போலீஸார் கூறு கையில், “ஜமீலா 3 ஆட்டோக் களை சொந்தமாக வைத்து அவற்றை வாடகைக்கு ஆட்களை வைத்து ஓட்டியிருக்கிறார். மேலும், 28 சவரன் நகைகளையும் வைத் திருந்தார். ஆட்டோக்களையும், நகைகளையும் அடைவதற்காக ஜமீலாவுடன் தொடர்பில் இருந்த ஆரோக்கியராஜும், ஜமீலாவின் ஆட்டோக்களை வாடகைக்கு ஓட் டிய 3 ஆட்டோ ஓட்டுநர்களும் திட்ட மிட்டனர். செவ்வாய்க்கிழமை காலையில் ஜமீலாவின் வீட்டுக் குள் 4 பேரும் நுழைந்து ஜமீலாவை கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் வீட்டில் இருந்த 28 சவரன் நகைகள், 3 ஆட்டோக்களுக்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு 4 பேரும் தப்பிவிட்டனர்.

காவல் துறையினர் கண்டுபிடித் துவிடுவார்கள் என்பதை அறிந்து ஆரோக்கியராஜை மட்டும் சரண் அடையச் சொல்லி, அவரை ஜாமீ னில் எடுக்க 3 பேரும் திட்டமிட்டுள் ளனர். ஆனால் தீவிர விசாரணை யில் அனைத்து தகவல்களும் வெளிவந்துவிட்டன. ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகிறோம்” என்று காவல் துறையினர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x