Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆமதாபாத்திலுள்ள டீகடையிலிருந்து நாடு முழுவதுமுள்ள டீக்கடைகளுக்கு வரும் பொதுமக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதன்கிழமை இரவு உரையாடினார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சென்னை வண்டலூரில் நடந்த அவரது மாநாட்டில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர், மோடி டீக்கடையில் வேலை செய்யவே தகுதியானவர் என்று கிண்டல் செய்திருந்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் 1000 டீக்கடைகளைத் தேர்ந்தெடுத்த மோடி, ஆமதாபாத்தின் டீ- கடையொன்றில் அமர்ந்து கொண்டு மற்ற டீக்கடைகளுக்கு வந்து போகும் பொது மக்களுடன் புதன் கிழமை இரவு உற்சாகமாக உரையாடினார்.
சென்னையில் சூளமேடு, அண்ணா சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகளிலும் அவருடன் பொதுமக்கள் உரையாடினர். சூளைமேட்டில் உள்ள டீக்கடையில் மோடியுடன் பேசுவதற்கு பொதுமக்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மணி சங்கர் அய்யருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த டீக்கடை உரையாடலை மோடி தனது பிரச்சார யுக்தியாகப் பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT