Published : 02 Jan 2015 10:09 AM
Last Updated : 02 Jan 2015 10:09 AM
கூடங்குளத்தில் 3,4-வது அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து இடிந்தகரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பொது மக்கள் கடலில் இறங்கி போராட்டத் தில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் வணிகரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியிருக்கிறது. 2-வது அணுஉலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப் படவுள்ளது. இங்கு 3, 4-வது அணுஉலைகள் அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இதற்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்ட குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில், இடிந்தகரை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு திருப்பலிக்குப்பின் போராட்ட குழுவினரும், இடிந்த கரை பகுதி மீனவர்கள், பெண்கள், சிறுவர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரைக்கு ஊர்வல மாக வந்தனர். அதிகாலை 1.30 மணியளவில் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அணு உலைகளை மூடக்கோரி கோஷ மிட்டனர். போராட்டக் குழு ஒருங் கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், மை.பா.ஜேசுராஜ், முகிலன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுசெயலர் தியாகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT