Published : 03 Jan 2015 01:22 PM
Last Updated : 03 Jan 2015 01:22 PM
நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன்.
கட்சியின் நாகை மாவட்ட 22-வது மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று வேதாரண்யம் வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் அவசியமில்லாதது. இதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகளிடமிருந்து அவர்களது நிலம் கேள்வியின்றி பறிமுதல் செய்யப்படும்.
விவசாயத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். காவிரிப் பிரச்சினையில் நதிநீர் மேலாண்மைக்குழு அமைக்க தயக்கம் காட்டுவதற்கும் காவிரி யின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதையும் கண்டிக் கிறோம். முல்லை பெரியாறு அணையில் 152 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இடுபொருட்களின் விலை 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந் துள்ள நிலையில், விவசாயிகளின் உற்பத்திப் பொருளான நெல், கரும்புக்கும் அதே அளவுக்கு விலையை உயர்த்தி தருவது தான் அரசின் கடமை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT