Published : 14 Feb 2014 09:28 AM
Last Updated : 14 Feb 2014 09:28 AM

வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே சிவகங்கையில் ப.சிதம்பரம் போட்டி?- தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது காங்கிரஸ் முகாம்

வலுவான கூட்டணி அமையாவிட்டால் சிவகங்கையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடமாட்டார் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், சிவகங்கையில் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை பக்காவாய் செய்து கொண்டிருக் கிறது சிதம்பரம் முகாம்.

கடந்தமுறை திமுக உடனிருந் தும் திணறித்தான் கரையேறினார் சிதம்பரம். அதனால், இம்முறை அவர் தனக்குப் பதிலாக மகனை நிறுத்தலாம் என்கிறார்கள். எனினும் ஓராண்டுக்கு முன்பே தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டது சிவகங்கை காங்கிரஸ். தொகுதியிலுள்ள 1684 பூத்களுக்கும் தலா பத்து பேர் கொண்ட பூத் கமிட்டிகள், இவர் களுக்கான தேவைகளைக் கவனிக்க ஐந்து பூத்களுக்கு ஒருவர் வீதம் ஒருங்கிணைப்பாளர்கள், ஒவ்வொரு ஏரியாவிலும் நடுநிலை மற்றும் ஊசலாட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு ’தேவை’களை சரிசெய்து அவர்களை காங்கிரஸ் பக்கம் திருப்புவதற்காக பூத்துக்கு ஒருவர் வீதம் 1684 களப்பணியாளர்கள் என தேர்தலுக்கான பக்கா ஏற்பாடுகள் நடந்து முடிந்துவிட்டன.

1684 களப்பணியாளர்களும் தலா 150-லிருந்து 200 புதிய வாக்காளர்களை காங்கிரஸ் பக்கம் ஈர்த்துவர வேண்டும் என்பது உத்தரவு. பூத் கமிட்டியில் உள்ளவர்களுக்கு சிதம்பரம் ஸ்டிக்கர் ஒட்டிய வாட்ச், வேட்டி, சேலை இவை இல்லாமல் மூன்று தவணை களாக கைச் செலவுக்கு கணிசமான தொகை இத்தனையும் கொடுத்து முடித்துவிட்டார்கள் என அவரது கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

இளம் வாக்காளர்கள் காங்கி ரஸை வெறுக்கிறார்கள் என்ற தோற்றத்தை உடைப்பதற்காக இளைஞர் - இளம் பெண்களுக் கான தன்னம்பிக்கை முகாம்களை யும் நடத்திக் கொண்டு இருக் கிறார் கார்த்தி சிதம்பரம். தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு மூன்று இடங்களில் இந்த தன்னம்பிக்கை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மன அழுத்தத்திலிருந்து விடுபடு வது எப்படி, பிரச்சினைகளை எதிர்கொண்டு மீள்வது எப்படி, இன்றைய சூழலுக்கு ஏற்ப நாகரிகமாக உடையணிவது எப்படி? இதுபோன்ற விஷயங்களை இந்த முகாம்களில் பயிற்று விக்கிறார்கள்.

இளம் பெண்களுக்கான முகாம்கள் அனைத்துத் தொகுதிகளிலும் நடந்து முடிந்து, அடுத்ததாக இளைஞர்களுக்கான முகாம்கள் ஜனவரி 30-ல் தொடங்கி பிப்ரவரி 23 வரை நடக்கின்றன. மார்ச் முதல் தேதி சிவகங்கையில் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநாடும் மார்ச் 8-ல் தேவகோட்டையில் மகிளா காங்கிரஸ் மாநாடும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ’தி இந்து விடம் பேசிய சிவகங்கை மாவட்ட காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், ’’இளம் பெண்களுக்காக நடத்தப்பட்ட தன்னம்பிக்கை முகாம்களில் சுமார் 5000 இளம் பெண்களுக்கு மேல் கலந்துகொண்டனர்.

அதேபோல் இளைஞர்களுக்கான முகாம்களிலும் தொகுதிக்கு 400 பேர் வரை வந்து கொண்டி ருக்கிறார்கள். இளைஞர்களுக்கு காங்கிரஸ் மீது வெறுப்பு இருந்தால் இவர்கள் எல்லாம் வருவார்களா’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x