Published : 03 Jan 2015 10:11 AM
Last Updated : 03 Jan 2015 10:11 AM
இந்தியா முழுவதும் இருந்து ஏறத்தாழ 30 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் கலந்துகொள்ளும் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா, சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று (சனிக்கிழமை) தொடங் குகிறது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் தொழில்நுட்ப திறமை களையும் படைப்பாற்றலையும் வெளிக்கொண்டுவரும் வகை யில் சாஸ்த்ரா எனப்படும் தொழில்நுட்ப திருவிழா, ஐஐடியில் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கான சாஸ்த்ரா தொழில் நுட்ப திருவிழா சனிக்கிழமை (இன்று) தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவ-மாணவிகளே இந்த விழாவை முன்னின்று நடத்துகிறார்கள்.
நாடு முழுவதும் இருந்தும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ-மாணவிகள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப பயிலரங்குகள், சர்வதேச நிபுணர்கள் பங் கேற்கும் கருத்தரங்குகள், புதிய கண்டுபிடிப்புகளை பறை சாற்றும் அரங்குகள் இதில் இடம்பெறுகின்றன. தொழில்நுட்பத் திறமை தொடர்பாக ஏராளமான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
தொழில்முனைவோர் ஆகும் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டும் வகையில் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்புகளை படித்து முடிக்கும் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்ற வர்களுக்கு வேலை கொடுக் கக்கூடிய தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாஸ்த்ரா தொழில்நுட்ப திரு விழாவின் தொடக்கவிழா இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), இஸ்ரோ மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் அரங்குகளை அமைத்துள்ளன.
தினமும் காலை 10 மணி மாலை 5 மணி வரை அரங்குகளை இலவசமாக பார்க்கலாம் என்று சாஸ்த்ரா விழா ஒருங்கிணைப்புக்குழு மாண வர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT