Published : 15 Jan 2015 10:56 AM
Last Updated : 15 Jan 2015 10:56 AM

‘தி இந்து’ இலக்கிய விழா சென்னையில் நாளை தொடங்குகிறது: சர்வதேச எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்பு

‘தி இந்து’ இலக்கிய விழா சென்னையில் நாளை (ஜனவரி 16) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெருமாள் முருகனின் நூல் உட்பட ஏராளமான தலைப்புகளைப் பற்றிய குழு விவாதங்கள் இந்த இலக்கிய விழாவில் இடம்பெறவுள்ளன.

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் மார்கழி இசை சீசன் நினைவுக்கு வரும். அதுபோல ஜனவரி வந்துவிட்டாலே ‘தி இந்து’ இலக்கிய விழாதான் சென்னைவாசிகளுக்கும், நாட்டின் பல் வேறு மாநிலங்களில் வசிக்கும் எழுத்தாளர்களுக்கும், கவிஞர் களுக்கும், இலக்கிய ஆர்வலர் களுக்கும் நினைவுக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.

இந்த மூன்று நாள் இலக்கிய விழாவில் (லிட் ஃபார் லைஃப் 2015) தலைசிறந்த பல்வேறு நூல்களைப் பற்றி பரபரப்பான பல்வேறு முக் கிய தலைப்புகளில் இலக்கியவாதிகள் விவாதிக்க உள்ளனர். ஒவ்வொரு நிகழ்விலும், பிரபல இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள், நெறியாளர்களாக இருப்பார்கள். அதில், குறிப்பிட்ட நூலைப் பற்றியோ, அந்த தலைப்பை பற்றியோ அது தொடர் புடைய எழுத்தாளர்கள், வல்லுநர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதிப்பார்கள்.

அனுமதி இலவசம்

4 ஆண்டுகளைக் கடந்து, 5-வது ஆண்டில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்திருக்கும் ‘தி இந்து’ இலக்கிய விழா, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை யில் உள்ள ஸ்ரீவெங்கட சுப்பாராவ் கன்சர்ட் அரங்கில் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

மேற்கண்ட அரங்கில் நாளை காலை 9.40 மணிக்கு விழா தொடங்கு கிறது. ‘தி இந்து’ ஆசிரியர் என்.ரவி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த இலக்கிய விழா வின் பொறுப்பாளர் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன இயக்குநர் டாக்டர் நிர்மலா லக்ஷ்மன், அறி முக உரையாற்றுவார். சிறப்பு விருந்தினராக, நீதித்துறை தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் பங்கேற்கிறார்.

தொடக்க நாளின் முதல் நிகழ்வாக, ‘புக்கர்’ பரிசு பெற்ற எழுத்தாளர் இலியனார் கேட்டன், பார்வதி நாயருடன் விவாதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, முற்பகல் 11.55 மணிக்கு, ‘கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து: எழுத்தாளர்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெறவுள்ளது. ‘மாதொரு பாகன்’ நூலாசிரியர் பெருமாள் முருகன் தனது நூல்கள் அனைத் தையும் திரும்பப் பெற்றிருப்ப தைப் பற்றியும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருப்பதன் பின்னணி தொடர்பாகவும் நடை பெறும் இந்த விவாதத்தில், கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத் தலைவர் என்.ராம், நீதியரசர் கே.சந்துரு, ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் தலைவர் சசிகுமார் ஆகியோர் விவாதம் நடத்தவுள்ள னர். பிரபல வரலாற்றாசி ரியர் வெங்கடாசலபதி நெறியாளராக செயல் படுவார்.

சர் முத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில் ‘தி இந்து’ இலக்கிய விழா நடைபெறும் அதே நேரத்தில், அதனரு கில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ‘தி இந்து’ பெவிலியனில் மூன்று நாட்களிலும் பல்வேறு பயிலரங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பெவிலியனில் இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (நாளை) முற்பகல் 11.55 முதல் 12.55 மணி வரை நடைபெறுகிறது.

கவிதைப் போட்டி

மேலும், டேமன் கால்கட் போன்ற பல்வேறு பரிசுகளை வென்ற நூலாசிரியர்கள், பிரபல இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பத்திரிகையாளர்கள் பி.சாய்நாத், பஹர் தத், திரைப்பட இயக்குநர்கள் சசிகுமார், வெற்றி மாறன், புகைப்படக் கலைஞர் தயனிதா சிங் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.

இலக்கிய விழாவையொட்டி நடந்த கவிதைப் போட்டியில் வென்றவர்களுக்கு வரும் 17-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தினமும் ஒரு குழு விவாதம் தமிழில் நடை பெற உள்ளது. இலக்கிய விழாவின் நிறைவு நாளன்று நடனம், இசை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x