Published : 12 Jan 2015 10:36 AM
Last Updated : 12 Jan 2015 10:36 AM
சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை சீரமைக்க கோரி பிப்.6-ம் தேதி தென் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்த வுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறிய தாவது:
சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையில் கடந்த 1970-ம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளிலேயே அதிக சுண்ணாம்புக் கல் உள்ள நிலங்களைக் கொண்ட (2228 ஏக்கர்) ஒரே சிமென்ட் ஆலையாக இந்த ஆலை இருக்கிறது. கடந்த 1980-ல் 2000 தொழிலாளர்களுடன் நல்ல லாபத்தில் இயங்கியது. தற்போது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள தமிழக அரசு இந்த ஆலை ரூ.165 கோடியில் சீரமைக்கப்படும் என கடந்த 2011-12 பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த ஆலையில் சிமென்ட் உற்பத்தி நடக்கவில்லை.
அம்மா சிமென்டை மூட்டை ஒன்றுக்கு ரூ.190க்கு விற்கிறது. இதனால், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆலங்குளத்தில் உள்ள அரசு ஆலையை புதுப்பித்தால் மூட்டை ஒன்றுக்கு ரூ.110 என்ற விலையில் தரமான சிமென்ட் கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT