Published : 12 Jan 2015 08:29 AM
Last Updated : 12 Jan 2015 08:29 AM
தமிழகம் முழுவதும் மின் ஆளுமைத் திட்டத்தை விரிவுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுத் துறை தனிநபர் தகவல்கள், ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டு, அரசுத் துறை சான்றிதழ்கள் மற்றும் பட்டா உள்ளிட்டவை ஆன் லைனில் வழங்கப்பட உள்ளன.
அரசுப் பணிகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு அரசுச் சான்றிதழ் கள் எளிதில் கிடைக்கவும், அரசுத் துறைத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கவும் தேசிய மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரியலூர், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவாரூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட் டங்களில் மின் ஆளுமைத் திட்டம் சோதனை அடிப்படையில் முதலில் அமலானது. நாமக்கல், சிவகங்கை, வேலூர், திருநெல்வேலி, சேலம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பணிகள் மின் ஆளுமை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், வரும் நிதி யாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்பட்ட மின் ஆளுமைத் திட்டம் அமலாக உள்ளது. இதற் காக தனியார் தொழில்நுட்ப நிறு வனத்தைத் தேர்வு செய்யும் பணிகளை, தகவல் தொழில்நுட்பத் துறையின், மாநில மின் ஆளுமைத் திட்ட தலைமை செயல் அதிகாரி தலைமையிலான குழு மேற்கொண் டுள்ளது.
இதுகுறித்து தகவல் தொழில் நுட்பத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மின் ஆளுமைத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத் திலும் அனைத்து தனி நபர்களின் தகவல்களும், ஆதார் எண்களுடன் இணைக்கப்பட உள்ளன. இதன்படி வருவாய்த் துறையின் பதிவேடு தகவல்கள், சமூகநலத்துறை திருமண நிதியுதவித் திட்டம், ஓய்வூதியர்கள் விவரம், கல்வி உதவித் தொகை பெறுவோர், நில அளவைத் துறை, முத்திரைத்தாள் மற்றும் பதிவுத் துறை சொத்து விவரங்கள், ரேஷன் அட்டைகள் போன்ற அனைத்தும் ஆதார் எண்களுடன், ஆன் லைனில் இணைக்கப்படும். வருவாய், சமூக நலம், தொழில், முன்னாள் ராணுவ வீரர்கள் நலன், ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து ஆகிய துறைகளின் விவரங்களை, கணினிமயமாக்கும் பணிகளை தேசிய தகவல் மையம் மேற்கொண்டுள்ளது.
முத்திரைத் தாள் மற்றும் பதிவுத்துறை இணையப் பணிகளை டாடா கன்சல் டன்ஸி நிறுவனமும், நகராட்சி நிர்வாகப் பணிகளை பஹ்வான் சைபர் டெக் நிறுவனமும், தேர்தல் துறை பணிகளை சி.எம்.சி., நிறுவனமும் மேற்கொண்டுள்ளன. அனைத்துத் துறைகளையும் ஆன் லைன் மூலம் இணைக்கும் பணிகளைத் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இத் திட்டம் அமலானதும் அனைத் துத்துறை அலுவலகப் பணியாளர் களுக்கும் தனியாக பயன்பாட்டாளர் முகவரி எண் மற்றும் ரகசிய எண் வழங்கப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழ், வில்லங்க சான்றிதழ் ஆகியவற் றைப் போல், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என அனைத் தும் இணையதளம் மூலமே மேற் கொள்ளப்படும். பள்ளிக்கூட சான்றி தழ்களும் ஆன் லைன் மூலமே வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மொபைல் போன் ஆப்ஸ் வசதி அரசுத் துறைகளின் மின் ஆளுமைத் திட்டத்தில் அரசுத் துறை களின் தகவல்கள், சான்றிதழ்கள் பெறுவதற்கான இணையதளத்தை, ஸ்மார்ட் போன்கள் மூலமும் இயக்க முடியும்.
இதற்காக ஆண்ட்ராய்டு, பிளாக்பெரி மற்றும் விண்டோஸ் ஆப்ஸ் (அப்ளிகேஷன்கள்) உருவாக் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதேபோல், தங்களது விண்ணப்ப நிலவரங்கள் தெரிய கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் எஸ்.எம்.எஸ். வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT