Published : 10 Jan 2015 11:07 AM
Last Updated : 10 Jan 2015 11:07 AM
தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 70.30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் கள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் சுமார் 45 ஆயிரம் மையங்களில் ஜனவரி 18-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் இந்த முகாம் நடைபெறும். 2-வது தவணை முகாம் பிப்ரவரி 22-ம் தேதி நடக்கிறது.
அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த முகாமில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் அருகில் உள்ள முகாமுக்கு சென்று கட்டாயமாக சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று சுகாதரத் துறை கோரியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT