Published : 16 Jan 2015 11:05 AM
Last Updated : 16 Jan 2015 11:05 AM

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கும் முடிவு சரியா?- தமிழக கல்வியாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கும் முடிவு சரியான நடவடிக்கையா? அல்லது தவறானதா? என்பது குறித்து தமிழக கல்வியாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

யுஜிசி கலைப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இணைப்பு அங்கீகாரம் அளிப்பது, உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உதவி வழங்குவது உள்ளிட்டவை யுஜிசியின் தலையாய பணிகள். யுஜிசி, தொழில் நுட்ப கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகிய அமைப்புகள் சரியாக செயல்படாததால் அவற்றை கலைத்துவிட்டு புதிய உயர்கல்வி அமைப்பை ஏற்படுத்து மாறு பேராசிரியர் யஷ்பால் கமிட்டி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

விரைவில் புதிய அமைப்பு

அண்மையில், மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு ‘நிதி ஆயோக்’ என்ற புதிய நிதி அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், 58 ஆண்டு பழமைவாய்ந்த யுஜிசி-யை கலைத்துவிட்டு தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி ஆணையம் என்ற புதிய உயர்கல்வி அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து தமிழகத்தைச் சேர்ந்த மூத்த கல்வியாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் வந்தன. முன்னாள் துணைவேந்தர்கள் சிலரின் கருத்து வருமாறு:

மு.ஆனந்தகிருஷ்ணன் (அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்)

யுஜிசி-க்குப் பதிலாக மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய கல்வி அமைப்பின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை. ஏதேனும் சீர்திருத் தம் செய்ய விரும்பினால் தற்போதைய யுஜிசி அமைப்பி லேயே தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளலாம். இதில் உள்ள குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டுவிட்டு தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி ஆணையம் என்ற பெயரில் புதிய கல்வி அமைப்பை உருவாக்கத் தேவையில்லை.

எஸ்.சாதிக் (சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்)

நீண்ட காலமாக இருக்கும் அமைப்புகளை இன்றைய காலத் துக்கேற்ப மாற்றியமைப்பதில் தவறு இல்லை. அந்த வகையில் யுஜிசி-யை மாற்றியமைப்பது ஏற்கக் கூடியது தான். ஆனால், புதிய அமைப்பைகாட்டிலும் மேலானது அதற்கு நியமிக்கப்படும் நிர்வாகி கள். அவர்கள் கட்சி சார்பு, மதச் சார்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய மத்திய அரசைப் பொருத்த வரை அது தேசியம் என்று சொன் னாலே ஆர்எஸ்எஸ் என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டியுள்ளது. ஆர்எஸ்எஸ் சாயம் பூசியவர் கள்தான் தேசியவாதிகளாக கருதப் படுகிறார்கள். யுஜிசிக்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய கல்வி அமைப்புக்கு கட்சி சார்பு, மதச்சார்பு இல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கல்வியில் மட்டுமின்றி நிர்வாகத்திறமையிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

க.ப.அறவாணன் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்):

தற்போதைய யுஜிசியை கலைத்துவிட்டு புதிய ஒரு உயர் கல்வி அமைப்பை உருவாக்கும் முடிவு மிகச்சரியான நடவடிக்கை ஆகும். தற்போது யுஜிசி யின் பொதுவான செயல்பாடுகள் நிறைவு அளிக்கக்கூடியதாக இல்லை. உறுப்பினர் நியமனத்துக்கு சரியான விதிமுறைகள் கடைபிடிக் கப்படுவதில்லை.

நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த போது இங்கிலாந்தில் உள்ள யுஜிசி என்ற அமைப்பை பார்த்து அதேபோன்ற கல்வி அமைப்பை இங்கு ஏற்படுத்தினார். ஆனால், அந்த யுஜிசி இந்தியாவின் கல்விச் சூழலுக்கு ஏற்றதாக இல்லை. இங்குள்ள கல்வி பிரச்சினைக ளுக்கு தீர்வு காண முடிய வில்லை.

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட குட்டி நாடுகளின் பல்கலைக்கழகங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கும்போது பெரிய நாடான இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெற முடியவில்லை! நம்மால் விஞ்ஞானிகளை உருவாக்க முடியவில்லையே! இந்த குறை பாடுகளுக்கு யுஜிசிதான் பொறுப் பேற்க வேண்டும். புதிதாக தொடங் கப்படும் அமைப்பு இத்தகைய குறை களை எல்லாம் நீக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x