Published : 13 Jan 2015 10:57 AM
Last Updated : 13 Jan 2015 10:57 AM

கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்கு இன்று 1,408 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இன்று 1,408 சிறப்பு பஸ்கள் இயக் கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழக அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 7,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டும் வெளியூர்களுக்கு 4,655 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பஸ் நிலையத் தில் பஸ் டிக்கெட் முன்பதிவுக் கென 25 கவுன்ட்டர்கள் திறக்கப் பட்டுள்ளன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்கின்றனர். இந்த நிலையில், கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்கு இன்று 1,408 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

இதுதொடர்பாக போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பொங்கல் பண்டிகைக்கென மொத்தம் 7,250 பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகளும் அதிகளவில் வருவர். டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 720 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த 3 நாட்களாக பஸ்களில் கூட்டம் அதிக அளவில் இல்லை. ஆனால், இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கும். எனவே, இன்று 1,408 சிறப்பு பஸ்களும், நாளை 1,457 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x