Published : 02 Jan 2015 10:00 AM
Last Updated : 02 Jan 2015 10:00 AM
கொடைக்கானல் மலையில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் தாண்டிக்குடி- கொடைக்கானல் சாலையில் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நேற்று அதிகாலை புத்தாண்டு பிறந்த நேரத் தில் கொடைக்கானல் மலையில் கனமழை பெய்தது. அப்போது கொடைக்கானல்- தாண்டிக்குடி சாலையில் சித்தரேவு என்னும் இடத்தில் புல்லாவழி செல்லும் சாலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட இடங் களில் 15 கி.மீ. தூரம் நிலச்சரிவு ஏற்பட்டது.
சாலையில் பாறைகளும் உருண்டு விழுந்தன. கொடைக்கானல்- தாண்டிக்குடி மலையில் பெய்த ஒட்டுமொத்த மழை தண்ணீரும் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஆங்காங்கு சாலையில் திடீர் நீர் வீழ்ச்சியாக விழுந்ததால் நள் ளிரவே கொடைக்கானல்- தாண்டிக் குடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாக னங்கள்கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் மண், மரம், செடிகள் விழுந்து மூடிக்கிடக் கின்றன.
அதனால், புத்தாண்டு தின மான நேற்று தாண்டிக்குடி, தடியன் குடிசை, புல்லாவெளி, பெரும் பாறை, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றி மலை உள்ளிட்ட 25 கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியே செல்ல முடியாமல் முடங்கிப்போய் உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் டம்டம் பாறையில் மணல் மூட்டை சாலை வழியாக வர அச்சமடைந்துள்ளனர். நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் நேற்று புத்தாண்டு தினம் என்ப தால் 11.30 மணிக்கு வந்து மண் சரிந்த இடங்களைப் பார்வையிட்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர். தற்போது எந்த நேரத்திலும் சரிந்துவிழும் அபாயத்தில் உள்ள கொடைக்கானல்- வத்தலகுண்டு மணல் மூட்டை சாலை வழி யாகத்தான் ஒட்டுமொத்த வாகனங் களும் சென்றுவருவதால் உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT