Published : 03 Jan 2015 11:25 AM
Last Updated : 03 Jan 2015 11:25 AM

ஜல்லிக்கட்டில் வாழ்க்கையை தொலைத்த உறவுகள்

ஜல்லிக்கட்டு விளையாட்டில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் குடும்பத்தினர் ஒருநாள் விளையாட் டில் தங்களது வாழ்க்கையை, உறவுகளை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் இன்னமும் தவித்து வருகின்றனர்.

மைதானத்தில் காளைகளை ஓட விட்டு மாடுபிடி வீரர்கள் அடக்கும் விளையாட்டு தமிழர்களின் பாரம் பரிய வீர விளையாட்டாகக் கருதப் படுகிறது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுக்கு அடுத்து, திண்டுக்கல் மாவட்டம் கொசுவப்பட்டி ஜல்லிக் கட்டு மிகப் பிரபலம். கொசுவப்பட்டி மட்டுமில்லாது, திண்டுக்கல் மாவட் டத்தில் நத்தம் வாடிப்பட்டி, தவசி மடை, புகையிலைப்பட்டி, கோமை யன்பட்டி, பிள்ளநாயக்கன்பட்டி, உலகம்பட்டி, வெள்ளோடு, ஆவாரம் பட்டி, கருங்குளம், பழநி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தை மாத கிறிஸ்தவ ஆலயத் திருவிழா, ஊர் திருவிழாக்களையொட்டி தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடக்கிறது.

தற்போது பொங்கல் திருவிழா நெருங்குவதால் ஜல்லிக்கட்டு விளை யாட்டு பரபரப்பு தற்போதே தொடங்கி விட்டது.

நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என கடந்த ஆண்டு மே 7-ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்குமோ, நடக்காதோ என்ற நெருக் கடி ஒருபுறம் இருந்தாலும் காளை களை அடக்க வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் வீரர்களை பந்தாட காளைகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உயிரிழந்தவர்கள், குத்துப்பட்டோர் குடும்பத்தினர், ஆண் டுக்கு ஒருநாள் நடக்கும் ஜல்லிக் கட்டு திருவிழாவில், தங்கள் வாழ்க் கையை தொலைத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கின்றனர்.

தம்பியை இழந்த ராணுவ வீரர்

திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப் பட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜல்லிக்கட்டில் பாலி டெக்னிக் கல்லூரி மாணவர் சூரியபிரகாஷ் உயிரிழந்தார். அவரது நினைவு தினம் ஜனவரி 16-ம் தேதி. தம்பியின் நினைவு தினத்துக்காக ராணுவத்தில் பணிபுரியும் அவரது அண்ணன், ஊருக்கு வந்துள்ளார். சூரியபிரகாஷைபோல அவரும் மாடுபிடி வீரர்தான். தனது ஜல்லிக்கட்டு ஆர்வம்தான், தம்பியின் மரணத்துக்கு காரணம் எனக் கூறும் அவர், துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். தம்பி இறந்த நாளோடு, ஜல்லிக்கட்டு விளையாட்டை கைகழுவி விட்டார்.

திண்டுக்கல் அருகே 2006-ம் ஆண்டு நடந்த கொசுவப்பட்டி ஜல்லிக்கட்டில் ஜோசப் (32) என்பவர் இறந்தார். கணவர் இறந்ததால் அவரது மனைவி ஜேசுமேரி கூலி வேலைக்குச் சென்று தனது 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையை சிரமப்பட்டு வளர்த்தார். முதல் இரு பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல், சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மூன்றாவது பெண் தங்கமணி பி.எஸ்சி 2-ம் ஆண்டு, நான்காவதாக பிறந்த மகன் லியோ ப்ளஸ் டூ படிக்கிறார். இருவரையும் படிக்க வைக்க ஜேசுமேரி போராடி வருகிறார். சாலையோரம் அரசு புறம்போக்கில் குடிசையில் வசிக்கின்றனர்.

ஜேசுமேரி கூறும்போது, எனக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது. ஜல்லிக்கட்டால் என்னோட வாழ்க்கையும் தொலைந்துவிட்டது.

இதுபோல, தென் மாவட்டங் களில் ஜல்லிக்கட்டில் மற்றவர் களை மகிழ்விக்க களம் இறங்கி உயிரை விட்டவர்கள், கை, கால், கண் உள்ளிட்ட பல இடங்களில் குத்துபட்டு முடமாகிப் போனவர் களின் குடும்பத்தினர், தங்களது இயல்பான வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசும் உதவவில்லை. ஜல்லிக் கட்டு விளையாட்டை நடத்த துடிப்பவர்களும் கண்டுகொள்ள வில்லை.

ஜல்லிக்கட்டு உயிரிழப்புக்கு காரணம் என்ன?

இதுகுறித்து தமிழ்நாடு காந்தி மன்ற இயக்க அமைப்பாளர் ஏ.அமலதாஸ் ‘தி இந்து’விடம் கூறும் போது, ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாக்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உயிர் பலி இல்லாமல் நடத்த அரசு தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும்.

இன்று வீதியெங்கும் திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகள் இளைஞர் சமுதாயத்தை உடல், மன அளவில் மிகவும் பலவீனமாக்கி அழித்து வருகின்றன. ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வருவோர், அடக்க வருவோரில் சிலர் மது குடித்துவிட்டே வருகின்றனர். முன்பு ஜல்லிக்கட்டு நடத்த ஊருக்கு மத்தியில் விசாலமான இடமிருந்தது. இன்று, சந்துகளில் எவ்வித பாதுகாப்பு இன்றி ஜல்லிக்கட்டு நடப்பதால் உயிரை இழந்து, கண் போய், இடுப்பு, கை, கால்களை இழந்து அவர்களது மனைவிகள், பெற்றோர் அல்லாடுகின்றனர். பாதுகாப்பில்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினால் உண்ணாவிரதம் இருப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x