Published : 10 Jan 2015 10:51 AM
Last Updated : 10 Jan 2015 10:51 AM
இந்தியாவில் 15 இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மாநில அரசுகள் திட்ட அறிக்கை அளித்தால் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவா தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழ கத்தில், உயர்கல்வியின் தரத்தை உறுதி செய்வது குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், தலைமை தாங்கி பேசும்போது, ‘‘வசதியானவர் களுக்கு மட்டும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு சிலர் மட்டும் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி படிக்கின்றனர். நமது நாட்டில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டும். இதற்கான வழிமுறை களை மத்திய- மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும்.
உலக அளவில் வெளிநாடுகளில் சென்று படிப்பவர்களின் எண் ணிக்கை 173 மில்லியனாக உள்ளது. நமது நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும் அங்குள்ள மாணவர்கள் இந்தியாவுக்கு வந்து படிக்கும் நிலை உருவாக வேண்டும். உலகமயமாக்கல் கொள்கையால் உயர் கல்வியில் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தின ராக மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவா பேசும்போது, ‘‘உலக அளவிலான முதல் தர 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் எந்த பல்கலைக்கழகமும் இடம்பெறவி ல்லை. இந்த பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் விரைவில் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை தேவை. இதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் 15 இடங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதுடன் ஏராள மானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக மாநில அரசுகள் திட்ட அறிக்கை கொடுத் தால் பரிசீலனை செய்யப்படும்.
முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகள் ஜவுளித் துறை பின் தங்கி இருந்தது. தமிழகத்தில் ஒரே ஒரு ஜவுளித் திரட்டு (கிளஸ்டர்) அமைக்க அறிவிப்பு வெளியாகி இருந்தது. அறிவிக்கப்பட்ட தொழில் திரட்டு அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் பேசப்படும்’’ என்றார்.
கருத்தரங்கில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT