Published : 20 Jan 2015 08:43 AM
Last Updated : 20 Jan 2015 08:43 AM

‘மாதொருபாகன்’ நாவல் விவகாரம்: அமைதிக் குழு கூட்டத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்செல்வன், உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ என்ற நாவல் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், திருச் செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின் மாயை பற்றியும், குழந்தையில்லா தம்பதி களின் வீணான முயற்சிகள் குறித் தும் எழுதியுள்ளார். நாவல் வெளி யிடப்பட்டபோது எந்த ஆட் சேபணைகளும் தெரிவிக்கப்பட வில்லை.

தற்போது திடீரென இந்த நாவலின் எதிர்ப்பாளர்களும் சாதிய அமைப்புகளும் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட னர். நடவடிக்கை எடுத்து சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண் டிய காவல்துறை வெறுமனே வேடிக்கை பார்த்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த அமைதிக் குழுக் கூட்டத்தில், நிபந்தனை யற்ற மன்னிப்பு கோருவதாகவும் நாவலில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கிவிடுவதாகவும், சந்தையில் விற்காத மீதமுள்ள நாவலை திரும்பப் பெற்றுக் கொள் வதாகவும் இனிமேல் மக்க ளின் உணர்வுகளைப் புண்படுத் தும் வகையில் எழுதப் போவ தில்லை என்றும் பெருமாள் முருகன் உறுதியளித்தார். இதனடிப்படை யில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.

ஒரு நாவல் ஆசிரியர், தனது அனுபவம் மற்றும் அறி வாற்றலைக் கொண்டு பழமை மற்றும் புதுமையான இலக்கியப் படைப்புகளைப் படைப்பதற்கு அடிப்படை உரிமை உள்ளது. அதை அமைதிக் குழு கூட்டத்தின் மூலம் பறித்துவிட முடியாது. இந்த கூட்டம் சுமுகமான சூழலில் நடைபெறவில்லை. பெரு மாள் முருகன் விடுத்த உறுதி மொழிகூட கட்டாயத்தின் பேரிலே நடந்துள்ளது. எனவே, நாமக் கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த அமைதிக் குழுக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவு சட்ட விரோதமானது. அந்த முடிவை செல் லாது என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x