Published : 06 Jan 2015 09:20 AM
Last Updated : 06 Jan 2015 09:20 AM
வண்டலூர் உயிரியல் பூங்கா வுக்கு தினமும் சுமார் 5,000 பார்வையாளர்கள் வந்து செல் கின்றனர். இந்தப் பூங்கா, ஒரே நாளில் சுற்றிப் பார்த்துவிட முடி யாத அளவுக்கு 602 ஹெக்டேரில் பரந்து கிடக்கிறது.
இங்கு பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக வெளியில் இருந்து பூங்காவுக்குள் உணவுப் பொருட்கள் எடுத்து வர தடை உள்ளது. எனவே, அங்குள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகத்தில் மட்டுமே சாப்பிட முடியும்.
இந்த உணவகத்தில் விற்கப்படும் உணவு, அதிக விலை யாகவும், அளவில் குறைவாக இருப்பதாகவும் பார்வையாளர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் பூங்காவுக்கு குடும்பத்துடன் வரும் ஏழை- எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து பூங்காவுக்கு வந்த பார்வையாளர் ஒருவர் தெரிவித்ததாவது:
நுழைவுக் கட்டணமாக பெரி யவர்களுக்கு ரூ. 30, சிறுவர்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. வீட் டில் சமைத்து கொண்டு வரும் உணவுகளுக்கு பூங்காவுக்குள் அனுமதி இல்லை. பூங்காவுக்குள் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகத்தில் உணவின் விலை அதிகமாக உள்ளது. ஆனால், அளவு குறைவாக உள்ளது. மற்ற சீன வகை உணவுகள் ரூ. 80-க்கு மேல் விற்கப்படுகிறது. இது என்னைப் போன்ற வசதி குறைவான குடும்பத்தினருக்கு பெரும் செலவை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தப் பகுதியில் அம்மா உணவகம் அல்லது கட்டு சாதங்களை மட்டும் விற்கும் உணவகத்தையாவது கூடுதலாக திறக்க வேண்டும். இது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக் குநர் கு.சுதாகரிடம் கேட்ட போது, ‘உணவகம் நடத்தும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளையே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச் சிக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இந்த உணவகம் வணிக ரீதியில் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் போன்று எங்களுக்கு எந்த மானியமும் கிடைப்பதில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு, தரத்துக்கேற்ப விலையை குறைத்துத்தான் கட்டணம் நிர்ணயிக்கிறோம்.
குறைந்த விலையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் மட்டும் வழங்கும் உணவகத்தை நாங் களே நடத்துவதற்கான சாத் தியக்கூறுகள் குறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக உயரதி காரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT