Published : 02 Jan 2015 11:40 AM
Last Updated : 02 Jan 2015 11:40 AM
தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
*மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளியை விட்டுச் செல்லும்போதும் தனித்தனியாக போகாமல் சேர்ந்து குழுவாக பாது காப்புடன் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
* பஸ்களில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் நிற்கக்கூடாது என்று மாணவர்களுக்கு ஆசிரியர் கள் அறிவுரை கூற வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டி கள், திறந்தநிலை கழிவுநீர் தொட்டி கள் இருந்தால் அவற்றை சீர்செய்ய வேண்டும். இடிந்துவிழும் நிலையில் கட்டி டங்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
* மாணவர்களுக்கு எட்டும் உயரத்தில் மின்கசிவு ஏற்படாத வாறு பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத் தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பிகள் மற்றும் அறுந்து தொங்கும் மின்கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT