Published : 21 Jan 2015 08:15 AM
Last Updated : 21 Jan 2015 08:15 AM

மலைவாழ் மக்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்க்க முயற்சி: ஆதிவாசி உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் மலைவாழ் மக்களை ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்க்க தொடர் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். தங்கள் மீது எவ்விதமான அடையாளங்களையும் பூசிக்கொள் ளாமல் இயற்கையை வணங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ் வொரு விதமான பிரச்சினைகள். வடமாநிலங்களில் ஒரு பக்கம் நக்சல்பாரிகளாலும் இன்னொரு பக்கம் துணை ராணுவத்தினராலும் இவர்கள் தங்கள் நிம்மதியை தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.

இந்நிலையில், மலைவாழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி களை செய்து தருவதாகவும் சொல்லி அவர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்களது இயக்கத்தில் சேர்த்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் ஆதிவாசி உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள்.

இதுகுறித்து `தி இந்து’விடம் பேசிய அவர்கள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பதாகச் சொல்லி இந்து அமைப்புகள் மாலைநேர தனி வகுப்புகளை நடத்தின. அந்த வகுப்புகளில் பகவத் கீதை உள்ளிட்ட இந்து மதம் சார்ந்த புத்தகங்களை குழந்தைகளுக்குக் கொடுத்தனர். இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்கள் பல பேர் இந்து அமைப்புகளில் இணைக்கப்பட்டனர். இப்போது அதேபோல் மலைவாழ் மக்களை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளில் சேர்க்க முயற்சிக்கின்றனர்.

தமிழகத்தில் 8 லட்சம் பேர்

தமிழகத்தைப் பொறுத்தவரை மலைவாழ் மக்கள் சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர். இதில் நீலகிரி, வால்பாறை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் `வனவாசி கேந்திரா’ அமைப்பினர் மலைவாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர போராடுவதாகவும் அவர்களுக்கு கோயில் கட்டித் தர உதவுவதாகவும் சொல்லி களத்தில் இறங்கியுள்ளனர். போடிநாயக்கனூர் கொட்டகுடி கிராமத்தில் இப்படிச் சொல்லி சிலரை இயக்கத்திலும் சேர்த்துள் ளனர். முன்பு வேறு மத அமைப்பு கள் செய்த காரியத்தை இப்போது இந்து அமைப்புகள் செய்ய தொடங்கியுள்ளன. இவர்களுக்கு மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறது. அமைதி யைத் தேடி சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மலைவாசி மக்கள் மீது இந்துத்துவா அடை யாளத்தை புகுத்துவது குற்றம். இது அந்த மக்களின் கலாச்சாரத்தை அழிக்கும் செயல். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆடலரசனிடம் கேட்டபோது, “ஆர்.எஸ்.எஸ்., இந்துக்களுக்கு பாதுகாப்பு அரணான அமைப்பு. நாங்கள் கட்டாய மதமாற்றம் செய்யவில்லை. தாங்களாகவே முன்வருபவர்களைத்தான் இந்து அமைப்புகளில் சேர்க்கிறோம். முன்பு எதையோ எதிர்பார்த்து அந்த மக்கள் வேறொரு பக்கம் சென்றனர்.

சென்ற இடத்தில் அவர் கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதால் இப்போது மீண்டும் பழைய இடத்துக்கே வருகின்றனர். அப்படி வருபவர்களை சேர்க்க மறுப்பதுதான் குற்றம்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x