Published : 04 Jan 2015 11:49 AM
Last Updated : 04 Jan 2015 11:49 AM
தமிழகத்தில் நேரடி காஸ்மானியம் பெறும் திட்டத்தில் அனைவரையும் சேர்க்கும் வகையில், வீட்டுக்கே சென்று வாடிக்கையாளர்களிடம் படிவங்களை பெறும் முறையை இண்டேன் நிறுவனம் நடை முறைப்படுத்த உள்ளது.
மத்திய அரசின் நேரடி மானியம் பெறும் திட்டத்தில் சேர்வதற்காக காஸ் ஏஜென்ஸி அலுவலகங்களில் வாடிக்கை யாளர்கள் ஒவ்வொரு நாளும் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக 4 படிவங்களாக இருந் ததை ஒரே படிவமாக மாற்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித் தன. ஆதார் எண் இல்லாதவர் கள் வங்கிக்கு செல்ல வேண்டிய தில்லை. காஸ் ஏஜென்ஸிகளிடம் படிவத்தை கொடுத்தால் போதும் என நடைமுறைகளை எளிமைப்படுத்தின.
இருந்தபோதிலும், எதிர்பார்த்த அளவு நேரடி மானிய திட்டத் தில் வாடிக்கையாளர்கள் சேர வில்லை. தமிழகத்தில் இண்டேன் இணைப்பு வைத்துள்ள 91 லட்சம் வாடிக்கையாளர்களில் 36 சதவீதத்தினர் மட்டுமே இத்திட்டத் தில் இணைந்துள்ளனர். இந்நிலை யில், இன்னும் அதிக வாடிக்கை யாளர்களை இதில் சேர்க்கும் வகையில், அவர்களின் வீட்டுக்கே சென்று படிவங்களை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை இண்டேன் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இண்டேன் நிறுவன சென்னை மண்டல பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்ததாவது:
பல்வேறு சூழல் காரணமாக வாடிக்கையாளர்கள் படிவங் களை பூர்த்தி செய்து காஸ் ஏஜென் ஸிகளிடம் வழங்க சிரமப்படுகின் றனர். அதனால் படிவம் பெறுவதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக, வீடுகளில் சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியர் களே படிவங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களி டமே நிரப்பப்பட்ட படிவங்களை வாடிக்கையாளர்கள் வழங்கலாம்.
இதுகுறித்த தகவலை, வாடிக் கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்து வருகிறோம். இந்த நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டாலும், அதில் உள்ள பிரச்சி னைகளை களைந்து மானியம் பெறும் திட்டத்தில் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சென்னை மண்டல முதுநிலை மேலாளர் (எல்பிஜி) வினோத்குமார் கூறும்போது, ‘‘எங்களிடம் 23 லட்சம் வாடிக்கை யாளர்கள் உள்ளனர். அதில் இதுவரை 8.5 லட்சம் பேர் மானியம் பெறும் திட்டத்தில் இணைந்துள்ளனர். நாங்களும் வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் மூலம் படிவங்களை பெற திட்டமிட்டுள்ளோம். ஜனவரி மாதத்தில் மேலும் 8.5 லட்சம் வாடிக்கையாளர்களை மானியம் பெறும் திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT