Published : 02 Jan 2015 09:55 AM
Last Updated : 02 Jan 2015 09:55 AM

சமையல் காஸ் மானியம் கேட்காத இண்டேன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: இந்திய அளவில் 17,929 பேர் ஒப்புதல்

இந்தியா முழுவதும் இதுவரை 17,929 பேர் தங்களுக்கு சமையல் காஸ் மானியம் வேண்டாம் என்று ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள்.

தேசத்தை கட்டமைக்கும் முயற் சியில் பங்கெடுத்துக் கொள்ளும் விதமாக பொதுமக்கள் தாங்களா கவே முன்வந்து, சமையல் காஸ் மானியம் பெறுவதை கைவிட வேண்டும் என அண்மையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வாடிக்கையாளர் களுக்கு குறுந்தகவல்களை அனுப் பியது. இதையடுத்து இந்தியா முழுவதும் பொதுமக்கள் தாங்க ளாகவே முன்வந்து, தங்களுக்கு சமையல் காஸ் மானியம் வேண் டாம் என ஒப்புதல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இண்டேன் வாடிக்கையாளர்களில் மானியம் வேண்டாம் என்று அறிவித்திருப் பவர்களின் எண்ணிக்கையில் இந்த நிமிடம் வரை தமிழகம் முத லிடத்தில் இருக்கிறது. இண்டேன், பாரத் காஸ், இந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங் கள் சமையல் காஸ் சிலிண்டர் களை வழங்கி வருகின்றன. இதில் 31-ம் தேதி மதியம் நிலவரப்படி இண்டேன் வாடிக்கையாளர்களில் 7,645 பேரும் பாரத் காஸ் வாடிக்கை யாளர்களில் 4,278 பேரும் இந்துஸ் தான் பெட்ரோலியம் வாடிக்கை யாளர்களில் 6,006 பேரும் தங்க ளுக்கு சமையல் காஸ் மானியம் வேண்டாம் என தெரிவித்திருக் கிறார்கள்.

இண்டேன் வாடிக்கையாளர் களில் மானியத்தை மறுத்திருப் பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 5.96 சதவீதம் கொண்ட தமிழகத்தில் இண்டேன் வாடிக்கையாளர்கள் 1,044 பேர் மானியம் வேண்டாம் என அறிவித்திருக்கிறார்கள். 16.49 சதவீதம் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 747 பேரும் 9.28 சதவீதம் கொண்ட மஹாராஷ்டி ராவில் 169 பேரும் 8.58 சதவீதம் கொண்ட பிஹாரில் 214 பேரும் 7.55 சதவீதம் மக்கள் தொகை கொண்ட மேற்குவங்கத்தில் 654 இண்டேன் வாடிக்கையாளர்களும் தங்களுக்கு மானியம் வேண்டாம் என அறிவித்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் குஜராத் தில் 330 இண்டேன் வாடிக்கை யாளர்களும் கேரளத்தில் 617 பேரும் டெல்லியில் 849 பேரும் ஆந்திராவில் 331 பேரும் தெலங்கா னாவில் 344 பேரும் கர்நாடகாவில் 483 பேரும் மத்தியப்பிரதேசத்தில் 199 பேரும் சிக்கிமில் 4 பேரும் தங்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்கள். கோவா மற்றும் மிசோரம் மாநிலங்களில் இண்டேன் வாடிக்கையாளர்கள் ஒருவர்கூட இதுவரை மானியம் விலக்கு கோரவில்லை.

இந்தியா முழுமைக்கும் இது வரை, தங்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என 17,929 பேர் அறிவித்திருக்கிறார் கள். இவர்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10 கோடியே 66 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதிச் சேமிப்பு கிடைத்திருக்கிறது. சமையல் எரிவாயு மானியத்தை அரசுக்கு திரும்ப ஒப்படைக்கும் நபர்களை ஊக்கப்படுத்தி கவுரவப்படுத்தும் விதமாக அவர்களின் பெயர், மாநிலம், இணைப்பு எண் உள் ளிட்ட விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இணைய தளத்தில் உடனுக்குடன் வெளியிட்டு வருவது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x