Published : 07 Jan 2015 10:45 AM
Last Updated : 07 Jan 2015 10:45 AM
கொளத்தூரில் தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக பெற் றோர்கள் இரவு முழுவதும் காத்தி ருந்தனர். தமிழ்நாட்டில் 4 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் உட்பட ஏறத்தாழ 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளி விதிமுறைகளின்படி, எல்கேஜி வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில்தான் நடக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் குறிப்பாக சென்னை யில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே இதற் கான விண்ணப்பங்களை விநியோ கிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
ஏப்ரல் 4-ம் தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கையை நடத் தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் ஆர்.பிச்சை சமீபத்தில் எச்சரிக்கை விடுத் திருந்தார்.
இருப்பினும் ஒருசில பள்ளிகளில் ரகசியமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை கொளத்தூர் சீனிவாசா நகரில் உள்ள டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர இன்று (புதன்கிழமை) விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாக அப்பகுதியில் தகவல் பரவியது.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதலே அந்தப் பள்ளியின் முன்பு பெற்றோர் குவியத் தொடங்கிவிட்டனர். இரவுமுழுக்க ஏராளமான பெற்றோர்கள் அங்கு நீண்ட வரிசையில் காத்துநின்றனர்.
விதிமுறைகளை மீறி முன்கூட்டியே மாணவர் சேர்க் கைக்கான பணியை தொடங்கும் இதுபோன்ற தனியார் பள்ளிகள் மீது மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT