Published : 12 Jan 2015 09:21 AM
Last Updated : 12 Jan 2015 09:21 AM
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் தற்போதைய மின் வெட்டு முறை நீக்கப்படுமா அல்லது சென்னைக்கும் அனைத்து மாவட்டங்களுக்குமான மின் வெட்டு முறை வருமா என்பது குறித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நாளை விசாரணை நடத்தவுள்ளது.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு உள்ள நேரங்களில், சூழ்நிலைக் கேற்ப மின் வெட்டு அமல்படுத்தப் படுகிறது. இதில் சென்னையில் மட்டும் பெரும்பாலும் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதில்லை. மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத் தப்படுகிறது.
மின்சார தட்டுப்பாடு மிகவும் அதிகமாகும் நேரத்தில், சென்னைக்கு ஒரு மணி நேரம் மட்டும் மின் வெட்டு அமல்படுத்தப்படு கிறது. இதுகுறித்து பல்வேறு தொழிற்துறையினர் மற்றும் மற்ற மாவட்டங்களிலுள்ள நுகர்வோர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் கோவை சிறு, குறுதொழில்கள் சங்கமான கொடீசியா ஆகியவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுவில் சென்னைக்கு மட்டும் ஒரு வகையான மின் வெட்டு, நகரங் களுக்கு ஒரு வகை மின்வெட்டு, கிராமங்களுக்கு மற்றொரு வகை என்று பாரபட்சமான மின் வெட்டு முறையை மாற்றி, ஒரே சீராக மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
அதேநேரம், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் வணிகப்பிரிவு தலை மைப் பொறியாளர் சார்பில், ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், தற்போது மின் வாரியம் அமல்படுத்தி வரும் மின் கட்டுப்பாடு முறை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட் டுள்ளது.
பிப்ரவரி முதல் கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில், மின் தேவை அதிகமாகி மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இந்த சூழலை, மின் வெட்டு மூலமே தமிழக மின் வாரியம் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், வரும் காலத்தில் தற்போதைய மின் வெட்டு முறையை அமல்படுத்துவதா அல்லது மாற்றுவதா என்பது குறித்து, நாளை (13-ம் தேதி) மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. இதில் தமிழக மின் வாரியத்தின் மனு, தமிழ்நாடு நுகர்வோர் சங்கத்தின் மனு மற்றும் கோவை சிறு,குறு தொழில்கள் சங்கத்தின் மனு ஆகியவற்றின் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் கோவை சிறு, குறுதொழில்கள் சங்கமான கொடீசியா ஆகியவை ஆணையத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT